வர்க்கம் மற்றும் வர்க்கமூலத்திற்கான பயிற்சி கேள்விகள்

சதுரம், கனசதுரம் மற்றும் அவற்றிற்கான வர்க்கங்கள் முதலியவற்றை அடிப்படையாகக்கொண்ட கேள்விகளை எழுப்பவும், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை காணவும் மாணவர்கள் கற்க இச்செய்முறைத்தாள் பயனுள்ளதாக இருக்கும்.

1.       பின்வரும் தகவல்களைக் கொண்டு வர்க்கமூலத்திற்கான கேள்வியை உருவாக்குக.

அ. 196 சதுர அடி  ஆ. நீச்சல் குளம்          இ. சுற்றுகள்

 

2.       பின்வரும் தகவல்களைக் கொண்டு வர்க்கமூலத்திற்கான கேள்வியை உருவாக்குக.

அ. 88 மீட்டர்கள்     ஆ. ஒரு தோட்டம்       இ. புல்வெளி

 

3.       பகாக்காரணியாக்கலை பயன்படுத்தி பின்வரும் எண்களுக்கு கன சதுரமூலத்தை கணக்கிடு.

                                 அ. 27                   ஆ. 1000           இ. 512                  ஈ. 4096

4.       2 அடி அகலமுள்ள ஒரு கனசதுரப் பெட்டியை கருதிக்கொள்ளவும். அதில் எவ்வளவு தண்ணீர் ஊற்ற முடியும் என்பதை கண்டுபிடி.

     

5.       ஒரு கன சதுர அறையின் கொள்ளளவு 1728 கன சதுர மீட்டர் (மீ 3) எனில், அந்த அறை எவ்வளவு அகலமாக இருக்கும்?

 

 Bellevue_cube_E27_jeh

 

 

 

6.       இலத்தின் வழியாக கிரீக்கிலிருந்து எடுக்கப்பட்ட ஃபெரென்ச் அளவீடான லீட்டரன் என்ற சொல்லிலிருந்து எடுக்கப்பட்டது தான் லிட்டர் என்ற சொல். 10 செ.மீ x 10 செ.மீ x 10 செ.மீ =1000கன சதுர செ.மீ(செ.மீ.3) அளவுள்ள பெட்டியில் எவ்வளவு திரவம் கொள்ளுமோ, அதுவே ஒரு லிட்டர் என்பதாகும். அவ்வாறெனில், 10 செ.மீ x 10 செ.மீ x 10 செ.மீ அளவுள்ள பெட்டியில், எவ்வளவு பாலை நிரப்பலாம்?

 

7.       ஒரு கன சதுர வடிவுள்ள தொட்டியில் 5832 லிட்டர் தண்ணீரை சேமித்துவைக்க முடியுமாயின், அத்தொட்டியின் அளவு என்ன?

 

 

8.       ஒரு குகைக்குள் குடியிரு~ண்து வாழ்ந்து வந்த வவ்வாள்களின் கூட்டத்தில் அனைத்து அம்மா வவ்வாள்களும் அதற்கு இணையான எண்ணிக்கையில் மகள் வவ்வாள்களை ஈன்றெடுத்தது. அவ்வாறே ஒவ்வொரு மகள் வவ்வாளும் அதற்கு இணையான எண்ணிக்கையில் பேத்தி வவ்வாளை ஈன்றெடுத்தது. 5832 பேத்தி வவ்வாள்கள் இருந்ததெனில், அக்குகைக்குள், எத்தனை அம்மா வவ்வாள்களும், எத்தனை மகள் வவ்வாள்களும் இருந்திருக்கும்?

 

bat

 

இணைப்புஅளவு
vrkkm_mrrrrum_vrkkmuulttirrkaannn_pyirrci_keellvikll.pdf361.53 KB
17587 registered users
6689 resources