ஆசிரியர் மேம்பாடு

'பள்ளி ஆசிரியரின் நாட்குறிப்பு' என்ற புத்தகத்தில் ஹேமராஜ் பட் என்ற அரசுப்பள்ளி
ஆசிரியருடைய நாட்குறிப்பு. ஹிந்தியில் எழுதிய இந்நாட்குறிப்பு ஆங்கிலத்தில் மொழிபெளிணிர்க்கப் பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி  புதுவை ஆசிரியர்கள் கார்த்திகேயன் மற்றும் சுபாஷினி அவர்கள் கட்டுரையாக எழுதியுள்ளனர்.
 
இக்கட்டுரை "திசைமானி"(பாதை-3, பயணம்-5) என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
 

அஞ்சல்காரர் வழியே கடிதங்களைப் பெறுவது என்பது ஒரு பழங்கதையாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்க, ’உன் அஞ்சல் பெட்டியில் என்ன’ என்ற பாடத்திட்டத்தின் மூலம் பல புதுமையான முயற்சிகளை விளக்குகின்றார் ஓர் ஆசிரியர். இந்தியாவில் பெண் கல்விக்கு வித்திட்ட முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே அவர்களின் புத்தகத்தைப் படித்து அதிலிருந்து கிடைத்த அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார் மற்றொரு ஆசிரியர்.

"உலகில் பல பகுதிகளில் எடுக்கப்பட்ட சமீபத்திய அறிக்கைகள் கணினி/த.தொ.-ன் துணையுடன் உள்ள கற்றல் நிகழ்ச்சிகள், எதிர்ப்பார்த்த அளவிற்கு கற்றலில் மேம்பாட்டை கொண்டுவரவில்லை என்பதையே காட்டுகின்றது."

இக்கட்டுரை 2012 ஆம் ஆண்டு, மே மாதம், பதிவு செய்யப்பட்ட, சுபிர் சுக்லா வின் வலைப்பதிவில்(blog post) இருந்து எடுக்கப்பட்டு, தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

வரலாறு என்பது பாடப்பொருள் மட்டுமன்று, அது மனித இனத்தைப்பற்றியும், உலகத்தை பற்றியும் இன்னும் சிறப்பாக புரிய வைக்க உதவுகிறது. வரலாற்றின் கலையாக இருக்கலாம் அல்லது கலையின் வரலாறாக இருக்கலாம், இவ்விரண்டுமே நம் வாழ்வில் முக்கிய பங்க் வகிக்கின்றது. இசை மற்றும் நடனத்தின் கண்கள் வழியாக வரலாறு கற்பிக்குமாறு கற்பனை செய்யவும். விதவிதமான கலை வடிவங்கள் பற்றியும், அதனை வரலாற்றுடன் எவ்வாறெல்லாம் இணக்கலாம் என்பது பற்றியும் ஆசிரியர் இங்கு கூறுகிறார்.

இக்கட்டுரை ,  2011 ஆம் ஆண்டு ஜூன் மாத டீச்சர் ப்ளஸ் (Teacher Plus) என்ற ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.

பகலில் பல் மருத்துவராகவும், இரவில் வலைத்தள சித்திரத்தொடரை உருவாக்கும் ஓவியராகவும், தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக்கொண்டவர் கிராண்ட் ஸ்னிடர். போராட்டம் மற்றும் கனவுகளும், ஓவியமும் கற்பனையும், கவிதைகள், அப்பாவித்தன்மை ...போன்ற  எல்லாவற்றையும் தனது தூரிகையால் தீட்டியுள்ளார். கேள்விகள் கேட்டல் பற்றிய மாதிரி சித்திரத்தொடர் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

"அனைத்து இடங்களிலும் மாற்றங்களை உணரும் பொழுது, அறிவியல் கல்வியில் குறிப்பாக மதிப்பீட்டு பகுதியில் அம்மாற்றங்களில் தாக்கமே இல்லை..." என்று தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர் சந்தீப் குல்கர்னீ. இவர் கஸகிஸ்தானிலுள்ள அஸ்தானா என்ற இடத்திலுள்ள நஸர்பயேவ் இண்டெலெக்சுவெல் பள்ளியில் கற்பிக்கிறார்.

குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் அமைப்பின் விதிமுறைகள் சில இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றது. இதனை வே. கணேசமூர்த்தி அவர்கள் எழுதியுள்ளார். இது http://www.canterburytamilsociety.org/thamilaruvi2006/kulanthaikalin.htm என்ற இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

பக்கங்கள்

18925 registered users
7393 resources