வகுப்பு 3 - 5

இக்காணொலிகாட்சி புதுவை அறிவியல் இயக்கத்தின் "துளிர் இல்ல"த்தின் செயல்பாடுகளில் ஒன்றான விளையாட்டு மூலம் அறிவியலைக் கற்றலின் ஒரு வகை விளையாட்டான, கற்றுத் தடை பற்றி சிரிய காகித அட்டைத் துண்டு மூலம் குழந்தைகள் கற்ற போது காட்சியாக்கப்பட்டது.
 
நன்றி: தமிழ்நாடு/புதுவை அறிவியல் இயக்கம்
இக்காணொலிகாட்சி புதுவை அறிவியல் இயக்கத்தின் "துளிர் இல்ல"த்தின் செயல்பாடுகளில் ஒன்றான விளையாட்டு மூலம் அறிவியலைக் கற்றலின் ஒரு வகை விளையாட்டான, ஒலி அதிர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள நூலை வைத்து ஒலி விளையாட்டை குழந்தைகள் கற்ற போது காட்சியாக்கப்பட்டது.
 
நன்றி: தமிழ்நாடு/புதுவை அறிவியல் இயக்கம்

குப்பி வாங்கி வந்த பெரிய சாறு  நிரம்பிய கொய்யாப்பழமும் முட்புதரினுள் விழுந்தபோது, எல்லா தந்திரங்களையும் உபயோகித்து, பழத்தைத் திரும்பப்பெற  முயலுகிறாள். தேவையானதைப் பெற தந்திரங்கள் செய்வது சரியா? இந்தக் கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் எல்லோரும் நம் வீட்டில் உள்ள மீன் தொட்டியில் அழகான பளிச்சென்ற, வண்ண மீன்கள் நீந்துவதைப் பார்த்து, சந்தோஷப் படுபவர்கள். ஆனால், அதில் அந்த மீன்களுக்கும் மகிழ்ச்சியா? ராஜூவுக்கும், வானவில் மீனுக்கும் நடக்கும் உரையாடலை, இந்த புத்தகத்தில் படித்து விட்டு நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

நாம் ஏன் குயிலின்  இனிய இசையை நகரங்களில் கேட்கவே முடிவதில்லை? நகரத்தைச் சேர்ந்த ராஜூ, இந்த கேல்விக்கும், இன்னும் பல கேள்விகளுக்கும், பதில்களை, தாத்தாவின் பண்ணையில் பார்த்த குயிலிடம் பேசும் போது தெரிந்து கொள்கிறான்.

நிதானமான அதேசமயம் தளராத முயற்சியுடைய ஆமை, கர்வம் பிடித்த முயலை வென்ற பந்தயம் பற்றி நினைவிருக்கிறதா? இப்பொழுது மீண்டும் அதே இருவர் இணைந்து, ஒரு செயலை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. ஒருவரின் உதவியின்றி மற்றொருவர் செயல்பட முடியாதென்பது இருவருக்கும் தெரியும். ஆனால், இந்த பழைய எதிரிகள் இணைந்து செயல்படுவது சாத்தியமா?

காக்கைகள் அழகாக இல்லை. அவர்களால் குயில் போல இனிமையாக பாட முடியாது. மயில் போல ஒயிலாக ஆட முடியாது. ஆனால் அவைகளிடமிருந்து நாமெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய சிறப்பான பாடம் ஒன்று உண்டு. அது என்ன என்று இந்த புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ராஜுவுக்கு தன் கண்களை நம்ப முடியவில்லை.

ஜூஸ் பாக்கெட் அல்லது ஜாம் பாட்டிலில் மட்டுமே பழங்களின் சுவையை அறிந்த நகரத்தில் வாழும் ஒரு சிறுவன் ராஜூ. ஒரு நாள் அவனுக்கு, அவனது தாத்தாவின் பழத்தோட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. பிறகு என்ன ஆயிற்று?

தாத்தா, பாட்டி வசிக்கும் கிராமத்திற்கு செல்வது என்றால் ராஜூவுக்கு எப்பொழுதுமே உற்சாகம்தான். அதிலும் இந்த முறை அவனது தாத்தாவும், பாட்டியும் அவனுக்கு ஒரு விசேஷமான ஆச்சரியம் வைத்திருக்கிறார்கள். அது என்ன?

பக்கங்கள்

17668 registered users
6704 resources