சமூகப் பாடங்கள்

‘ ஏகலைவா ’ என்ற அரசு சேரா நிருவனம், 1986 வருடத்திலிருந்து 2002 வருடம் வரையில் நடுநிலைப்பள்ளிகளில் சமூக அறிவியல் கல்வி கற்பிப்பதைச் சிறப்பிக்க புதிய சோதனை முயற்சிகளை மேற்கொண்டார்கள். மாநில கல்விப் பாடத்திட்டத்தைத்தினை மனத்தில் கொண்டு, புதிய பாடப்புத்தகங்களை உருவாக்கி, அவைகளை மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் எட்டு நடுநிலைப்பள்ளிகளில் இந்த புது மாதிரியான மாற்றி அமைக்கப்பட்ட பாடங்களை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு தனியாக பயிற்சி அளிக்கப்பட்ட அரசாங்க ஆசிரியர்களின் உதவியால், பரிட்சார்த்தமாக செயல்படுத்தப் பட்டன.

அடுத்த 50 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒன்பது பில்லியனைத் தொடக்கூடும். இந்த வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் ஏழ்மையில் உள்ளவர்களின் வாழ்வு நிலையை உயர்த்த வேண்டும். இந்த முரணான விடையத்தை ஹான்ஸ் ரோஸ்லிங் கேனில் நடைபெற்ற TED கூட்டத்தில புள்ளியியலை விவரிக்கும் புதிய தொழில்நுட்ப உதவியுடன் விளக்கினார்.

நவீன காலத்தில் நிகழும் அற்புதங்களின் மூலத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு இந்தச் சிறிய கதை நமக்கு உதவியாக இருக்கும்.

நீர் உருமாற்றச் சுழற்சி அல்லது நீர் சுழற்சி என்றால் பூமியில் உள்ள நீர் இடைவிடாத சுழற்சியினால் மீண்டும் நீராக மாறுவதைக் குறிப்பதாகும். பூமியில் இருக்கும் நீரானது மூன்று நிலைகளில் இருக்கிறது. சுழற்சி வழி மூலமாக நீரானது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உருமாறுகிறது. இந்த மாற்றத்தை நிகழச் செய்வதற்கு வேண்டிய முழுச் சக்தியும் சூரியனிடமிருந்து வருகிறது. நீர் உருமாற்ற சுழற்சியின் முக்கிய அம்சம் - ஆவியாதல், குளிர்தல், கசிதல், உறைதல் ஆகும். கீழ்க்கண்ட செய்முறைப் பயிற்சியின் மூலம் நீர் சுழற்சியின் சில அம்சங்களை நேரடியாக மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்.

கதை சொல்வது என்பது ஒரு திறமை. இதை ஒவ்வொரு ஆசிரியரும் வளர்த்துக் கொள்ளவேண்டும். குழந்தைகளுக்குக் கதைகளின் மூலம் கற்பிப்பதைத் தவிர சிறந்த வழி வேறெதுவும் இல்லை. கற்பனை கதைகள் மூலம் தகவல் மற்றும் உண்மை நிகழ்வுகள் போன்ற கதவுகள் குழந்தைகளுக்குத் திறக்கப்படுகின்றன. மக்கள் அவர்கள் வாழும் இடங்கள் மற்றும் புதிய பண்பாடுகள் இவற்றைக் கதைகளின் மூலம் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். புதிய எண்ணங்கள் மற்றும் விஷயங்களை அவர்கள் பரிசோதித்துப் பார்க்க இது உதவுகிறது. இந்தக் கதைகளின் மூலம் நதிகள் பற்றிய சுவராசியமான கல்வியைப் பெறுவதுடன் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கலாம்.

 

சமூகப் பாடங்களின் பல தலைப்புகளுக்கான பயிற்சித் தாள்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள கருத்துப் படிமங்கள் அகில இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் அனைத்துவிதமான கல்வித் திட்டங்களுக்கும் பொருந்தும்.

சுற்றுச் சூழல் அறிவியல் பாடப் பயிற்சித் தாள்களில் பட்டியல்

பாம்புஎன்றால் நடுங்க வேண்டுமா?

ஆக்கம் - சு. சிவக்குமார், சுற்றுச் சூழல் அதிகாரி, பாம்புப் பண்ணை, சென்னை.

தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் வெளியீடான ‘துளிர்’ஆகஸ்ட் 2011 இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை இது.

பாம்புகளைக் கண்டு பயப்படுவது அறிவியல் அடிப்படையில் அமைந்தது அல்ல என்றும், அது தவறான மூட நம்பிக்கையாகும் என்றும் இந்த விழிப்புணர்வை சென்னை பாம்புப் பண்ணையில் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் நடத்தப்படுவதையும் விளக்கி இதில் எழுதப்பட்டுள்ளது.

கோள்களின் நிலைகள் -  ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 9 வரை

ஆசிரியர் - சே. பார்த்தசாரதி.

தமிழ் நாடு அறிவியல் அமைப்பின் வெளியீடான  ”துளிர் “இதழில் வெளியிடப்பட்ட சமூக அறிவியல் கட்டுரை இது.

ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 9 வரையில் வானத்தில் தோன்றும் பல கோள்களின் நிலைகளை படத்துடன் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

முழு விவரங்கள் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி அறியவும்.

 

 

கதை சொல்லுதல் என்பது ஒரு கலை. அந்தக் கலையை ஒவ்வொரு ஆசிரியரும் அதில் கற்றுத் தேர்ச்சி அடைய வேண்டும். ஏனென்றால், கதைகள் சொல்லிப் பாடம் நடத்துவதைக் காட்டிலும் வேறு சிறந்த வழி இல்லை. கற்பனைக் கதவுகவுகளைத் திறப்பதற்கும், தகவல்கள் – உண்மைகள் ஆகியவைகளைக் குழந்தைகள் அறிந்து கொள்வதற்கும், கதைகள் தான் உதவுகின்றன.

பக்கங்கள்

19267 registered users
7629 resources