அறிவியலும், தொழிலுட்பமும்

மரங்களின் கட்டுமானம், இயற்கையில் அதன் முக்கியத்துவம் பற்றிய கோட்பாடுகளை வலியுறுத்துவதற்கு இந்தச் செயல்பாடுகள் உபயோகமாக இருக்கும். இதை நேரடியாக குழந்தைகளிடம் விநியோகிக்கலாம். செயல்பாடு ஆரம்பிப்பதற்கு முன்பு அவர்களுக்கு விளக்க வேண்டும்.

பூமி வெப்பமடைந்து வருவது ஒரு நிதர்சன உண்மை. அதைத் தடுத்து நிறுத்த நீங்கள் உதவமுடியும். இந்த உண்மையினை உணர்த்த பிரேசில் நாட்டு இயற்கைக்கான உலகலாவிய நிதியம் 30 நிமிடங்களே ஓடக்கூடிய ஒரு ஒப்பற்ற அனிமேஷன் வீடியோ படத்தை வெளியிட்டுள்ளது.

தேவைப்படும் பொருட்கள்:

 1. ஃபோம் டம்ளர் - Styrofoam Glass.
 2. இரண்டு செவ்வக அட்டைகள்.
 3. வெட்டும் கருவி -  Cutter.
 4. பல் குத்தும் குச்சி - Tooth Pick
 5. உறிஞ்சி -  Straw
 6. பசை

வீடியோவில் விளக்கிய படி செய்து, ஒரு விளையாட்டு காற்றாடியைச் செய்து மகிழலாம். இது குழந்தைகளே எளிதாகச் செய்யும் ஒரு விளையாட்டுக் கருவியாகும்.  

தேவைப் படும் பொருட்கள்:

 1. காலியான தீப்பெட்டி
 2. கத்தரிக்கோல்
 3. தைகக்கும் ஊசி
 4. நூல் கண்டு

வீடியோவில் விவரித்துள்ள படி நூலைத் தீப்பெட்டியில் நுழைத்து நூலின் முனைகளை முடிச்சுப் போடவேண்டும். தீப்பெட்டியின் முகப்பில் ஒரு முயல் அல்லது பூனைப் படத்தை ஒட்ட வேண்டும். பிறகு நூலை இரு கைவிரல்களிலும் வீடடியோவில் காட்டி உள்ள படி வைத்துக் கொண்டு, தீப்பெட்டியில் ஒட்டிய படத்தைத் தொடாமலே நகரச் செய்வதைப் பார்ப்பது, விந்தையாகத் தோன்றும்.  

தேவைப்படும் பொருட்கள்:

 1. தடிமனான மரக்கட்டை
 2. அந்த மரக்கட்டையின் நடுவில் ஒரு பெரிய நீளமான ஆணி.
 3. அந்த மரக் கட்டையைச் சுற்றி 9 ஒரே அளவுள்ள நீளமான ஆணிகள் வைக்கும் துளைகள்.
 4. 9 ஆணிகள்

வீடியோவில் காட்டப்பட்டுள்ளது போல் ஆணிகளை அமைத்து, மரக்கட்டையின் நடுவில் உள்ள ஆணியில் வைத்தால், அந்த அமைப்பு அந்தரத்தில் கீழே விழாமல் ஆடும் விந்தையைக் காணும் குழந்தைகள் கைகளைத் தட்டு மகிழ்வார்கள் என்பது நிச்சயம். 

தேவைப்படும் பொருட்கள்:

 1. 4 செ.மீ. விட்டமும், 60 செ.மீ. நீளமும் உள்ள ஒரு பி.வி.சி.பைப்
 2. இரண்டு 1/2 லிட்டர் வாட்டர் பாட்டில்

வீடியோயில் விளக்கியபடி செய்து, அந்த இரண்டு பாட்டில்களும் பைப்பில் அந்தரத்தில் கீழே விழாமல் இருக்கும் விந்தையை இந்தச் செயல்முறையின் மூலம் காண்பித்து, குழந்தைகளை வியப்படைய வைத்து, அதன் அறிவியல் தத்துவத்தை விளக்கிச் சொன்னால், குழந்தைகள் ஆர்வமாகக் கேட்டுப் பயில்வார்கள்.

 

தேவைப்படும் பொருட்கள்:

 1.   பிளாஸ்டிக் பை
 2. பிளாஸ்டிக் பாட்டில்
 3. கத்திரிக்கோல்

வீடியோவில் விளக்கப்பட்டதைப் போல் மூடிபோட்ட காற்றுப் புகாத பையை உருவாக்கலாம். இது நாம் பிரயாணம் செய்யும் போது சிறிய சமான்களை பத்திரமாகக் கொண்டு போக வெகுவாகப் பயன்படும்.

தேவைப்படும் பொருட்கள்:

 1. நியூஸ் பேப்பர்
 2. ஒரு சிறிய குழாய்த் துண்டு
 3. செலோ டேப்
 4. கத்திரிக்கோல்

காற்றை கூம்பிற்குள் ஊதும் போது, அந்தக் காற்று வேகமாக கூம்பில் உள்ள காற்றை வெளியேற்றுகிறது. அதனால் கூம்பின் உள்ளே காற்றழுத்தம் வெளியே உள்ள காற்றழுத்தத்தை விட குறைவாகி விடுவதால், வெளிக் காற்றின் அழுத்தத்தால் கூம்பின் தாள் ஒட்டிக் கொள்கிறது. 

இதற்கு பெர்னாலி விதி என்று பெயர். 

மூன்று மெழுகு வர்த்திகள் எரியும் போது, கண்ணாடி டம்ளரில் உள்ள காற்றிலுள்ள பிராணவாயு அதிவிரையாக உறுஞ்சப்பட்டு வெற்றிடம் உருவாகிறது. அதனால், வெளிக் காற்றின் அழுத்தத்தினால் தட்டிலுள்ள கலர் தண்ணீர் அதிக அளவில் டமள்ருக்குள் செல்கிறது. ஆகையால், ஒரு மெழுகு வர்த்தி எரியும் போது, கண்ணாடி டம்ளரில் உள்ளே இருக்கும் அளவை விட  இரண்டு மெழுகு வர்த்திகள் எரியும் போது டம்ளரில் உள்ளே புகும் நீரின் அளவு அதிகமாகவும், மூன்று மெழுகு வர்த்திகள் எரியும் போது, நீரின் அளவு இன்னும் அதிக அளவிலும் காணப்படும் அதிசயத்தை மாணவர்கள் கண்டு வியப்படைவார்கள். 

தேவைப்படும் பொருட்கள்:

மூடப்பட்ட கட்டமைப்பில் காற்றின் அழுத்தம் விந்தையாகச் செயல்படும் தன்மையை விளக்கும் ஒரு மனதைக் கவரும் ஒரு செயல்முறைப் பயிற்சியாகும் இது.

தேவைப்படும் பொருட்கள்:

 1. இரண்டு துளைகள் உள்ள ஒரு ரப்பர் கார்க்
 2. இரண்டு பிளாஸ்டிக் டியூப்புகள்
 3. கண்ணாடி குடுவை
 4. இரண்டு ரப்பர் பாண்டுகள்

 

பக்கங்கள்

19281 registered users
7632 resources