அறிவியலும், தொழிலுட்பமும்

தேவைப்படும் பொருட்கள்:

 1. பழைய பிளாஸ்டிக் பாட்டில்
 2. ரப்பர் பேண்ட்
 3. சிறிய திருகு ஆணி
 4. செலோ டேப்
 5. மை நிரப்பி
 6. தண்ணீர்
 7. பழைய டியூப் லைட்

வீடியோவில் விளக்கிய படி செய்து பயிற்சி செய்யவும். 

பாட்டிலை அழுத்தும் விசைக்கு ஏற்ற படி, பாட்டிலில் உள்ளே மிதக்கும் மை நிரப்பி காற்றழுத்தத்தினால் மேலும் கீழும் செல்லும்.

இந்த மை நிரப்பியை ஒரு பழைய டியூப் லைட்டின் உள்ளே வைத்து, டியூப் மேலே இருந்து காற்றழுத்தத்தை உண்டாக்கினால், மை நிரப்பி காற்றின் விசையினால் கீழே இறங்கும்.

தேவைப்படும் பொருட்கள்:

 1. மெல்லிய ஸ்ட்ரா
 2. தடிமனான ஸ்ட்ரா
 3. ஒட்டும் டேப்
 4. கத்தரிக்கோல்

வீடியோ காட்சியில் விளக்கப்பட்டிருப்பது போல் இரண்டு ஸ்ட்ராக்களையும் ஒன்றோடொன்று இணைத்து, மெல்லிய ஸ்ட்ராவின் ஒரு பக்கத்தின் முனையை ஒரு விரலால் மூடி, மறு முனையிலிருநது வாயினால் காற்றை ஊதினால், தடிமனான ஸ்ட்ரா காற்றாடி போல் வேகமாகச் சுற்றும்.

இது நியூட்டன் மூன்றாம் விதியான - ஒவ்வொரு விசைக்கும் அதே அளவு எதிர்விசை உண்டு - என்பதை இந்த விளையாட்டுப் பரிசோதனை விளக்கும்.

தேவையான பொருட்கள்: 

 1. நேரான ஸ்ட்ரா
 2. துளை உள்ள வட்டவடிவ சிறிய காந்தங்கள்
 3. ரப்பர் துண்டு
 4. அட்டைத் தவளை
 5. கத்தரிக்கோல்

வீடியோ படத்தில் விளக்கியபடி செய்து, தவளை தத்தித் தந்தி மேலும் கீழும் செல்லும் விந்தையைப் பார்ப்பீர்கள்.

காந்த சக்தியின் நேர்-எதிர் மின் முனைகளினன் தன்மைகளை விளக்கும் பரிசோதனையாகும் இது. 

ஒரே முனை உள்ள இரு காந்தங்கள் விலகிச் செல்லும் என்ற தத்துவம் இதனால் விளக்கப்படுகிறது. 

தேவையான பொருட்கள்:

 1. 1.5 வோல்ட் பாட்டரி செல்.
 2. சுத்தமான இரும்பு திருகாணி
 3. வளையும் ஒயர்.
 4. பேப்பர் கிளிப்
 5. சக்தி வாய்ந்த வட்ட உரளை வடிவ சிறிய காந்தம்.

வீடியோவில் காண்பித்தபடி செய்தால், சிறிய மோட்டார் தயார்.

மின்சாரத்தில் கிளிப் வேகமாக காற்றாடியைப் போல் சுழலுவதைக் காண ஆச்சரியமாக இருக்கும்.

மின் சார விசிறி சுற்றும் காரணத்தை இந்தச் சிறு பரிசோதனை விளக்கும்.

 

கணினி மூலம் தமிழில் தட்டச்சு செய்யும் நிலை உள்ளது.

அதற்குரிய மென்பொருட்களை இலவசமாக பத்விறக்கம் செய்யலாம்.

அதைச் சுலபமாக அனைவரும் - மாணவ-மாணவிகளும் - கூட கணிப்பொறி மூலம் எப்படிச் செய்ய வேண்டும் என்ற செயல்முறை விளக்கம் இதில் இருக்கிறது.

இதன் மூலம் தமிழ் தட்டச்சைச் செய்து, உங்கள் வேலையைச் சுலபமாக்கிக் கொள்வதுடன், தமிழ் வளர்க்கவும் இது உதவும்.

இந்த பவர்பாயிண்ட் உரை விளக்கம் அமைத்து அனுப்பி பகிர்ந்து கொண்டவர்:

திரு. கு.சீனுவாசன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாலை அகரம், கோலியனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.

 

தேவைப்படும் பொருட்கள்:

 1. காலி டூத் பேஸ்ட் டியூப்
 2. ஸ்ட்ரா
 3. செல்லோ டேப்
 4. கத்திரிக்கோல்

வீடியோ படத்தில் விளக்கியபடி டூத் பேஸ்ட்டை வெட்டியும், மையத்தில் துளை போட்டும் ஸ்ட்ராவை இதில் சொல்லியபடி செய்தும் டியூப் சுழல் விசிறியை உருவாக்க வேண்டும். 

ஸ்ட்ரா மூலம் காற்றை வாயினால் ஊதினால், முன்னியக்கி (Propeller) போல் இந்தக் கருவை விசிறி போல் சுழலும் விந்தையைக் காண்பீர்கள். 

இந்தச் செய்முறைத் தாள் பொதுவான பொருட்கள் மற்றும் அனுபவங்களைப் பயன்படுத்தி ஒலி தொடர்பான எண்ணக்கருக்களை மாணவர்கள் புரிந்து கொள்ள உதவக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்முறைத்தாள் சிறந்த எதிர்காலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு  மாணவர்களுக்கு கீழ்க்கண்டவைகளைப் புரிய வைக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

 1. பல்வேறு வகையான எரிபொருட்கள்
 2. எரிபொருளின் அவசியம்
 3. பல்வேறு உத்திகளின் மூலம் எரிபொருட்களை பாதுகாத்தல் மற்றும் திறமிக்க முறையில் பயன்படுத்துதல்.

 

 

 

 

தேவைப்படும் பொருட்கள்:

 1. 200 எம்.எல். பிளாஸ்டிக் பாட்டில் மூடியுடன்.
 2. ஒட்டும் டேப்
 3. வட்டவடிவமான பாட்டில் மூடியில் வைக்கும் அளவு காசு
 4. கத்திரிக்கோல்
 5.  பிளாஸ்டிக் கைப்பிடிக் குவளை - கலர் தண்ணீருடன்

வீடியோ காட்சியில் விளக்கியபடி மூடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் உடம்பு ஆகியவைகளில் இரு துளைகள் இடவும். ஒரு டேப் வால்வு செய்து பாட்டிலின் உடம்பில் போட்ட துளையை மூடும் படி ஒட்டவும். அதாவது காற்றை ஊதும் போது டேப் எளிதில் திறந்து மூடவேண்டும் - அதாவது ஒரு வால்வு போல் செயல்படும் படி ஒட்ட வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள்:

பக்கங்கள்

19281 registered users
7632 resources