அறிவியலும், தொழிலுட்பமும்

தண்ணீர் முழுவதையும் உறுஞ்சும் பாலிமர் ரசாயனப் பொருளான Sodium Polyacrylate எப்படிச் செயல்பட்டுகிறது என்பதையும், அது எவ்வாறு குழந்தைகளின் நாப்கின்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் விளக்கும் இந்த வீடியோ தேசிய வேதியல் ஆய்வுக் கூடம், புனே உருவாக்கி புகழ் பெற்ற அர்விந்த் குப்தா அவர்களின் முயற்சியால் தமிழாக்கம் செய்யப்படடு வெளியிடபபடுகிது.                           

தேவைப்படும் பொருட்கள்:       

1.    தண்ணீரில் நன்கு கரையும் பாலிமர் ரசாயனப் பொருளான Sodium Polyacrylete

2.   கலர் தண்ணீர்

3.   தேக்கரண்டி

4.   காலி பிளாஸ்டிக் கப்

நீரின் அழுத்தம் உயரத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதை நிரூபிக்கும் பரிசோதனை.

தேவைப்படும் பொருட்கள்:

 1. 2 பிளாஸ்டிக் பாட்டில்கள் (மூடியுடன்).
 2. ஒரு 20 செ.மீ. நீளமுள்ள ஸ்ட்ரா & 3 செ.மீ. நீளமுள்ள மூன்று ஸ்ட்ராக்கள் 
 3. தண்ணீர்
 4. கத்தரிக்கோல்
 5. ஒரு பிளாஸ்டிக் பக்கட் & ஒரு பிளாஸ்டிக் பேசின். 

செய்முறை: 

வீடியோவில் விளக்கிய படி இரண்டுபாட்டில்களிலும் நீரை நிரப்பி, அவைகளைத் தலைகீழாகக் கவிழ்க்கவும். எந்த பாட்டில் நீர் முதலில் காலியாகிறது என்பதைக் கவனிக்கவும். 

அதற்கான காரணத்தைப் பற்றிச் சிந்திக்கவும். 

”ஒரு மனிதனுக்கு உடல் நலம் அல்லது ஆரோக்கியம் இல்லையெனில், வேறு எது இருந்தும் பயன் என்ன ?” 
இக்கருத்தை ஒத்துக்கொள்ளாதவர்கள் எவரேனும் இருப்பார்களா ?
இதை மறுப்பேதுமின்றி ஒப்புக்கொள்ளும் நாம், நமது உடலைப்பற்றி எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள இந்த பரிசோதனை !

இந்தப் பயிற்சித் தாளில் வாழ்க்கைச் சக்கரம் பற்றிய கருத்து விளக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை இதே தலைப்பு கொண்ட பாடத்தைத் திட்டமிடும் கட்டுரையில் காணலாம்.

தேவைப்படும் பொருட்கள்: 

 1. முட்டை
 2. உப்பு
 3. சிறிய   உலோகக்   கன செவ்வகம்.
 4. சதுரமான அடிப்பாகம் கொண்ட பிளாஸ்டிக / கண்ணாடி பெட்டி
 5. பாட்டரி

சில பொருட்களை செங்குத்தாகவும், மற்ற சில பொருட்களை கீழ் முனைபாகத்தில் சாய்வாக கீழே விழாமல் சமநிலையில் நிற்க வைப்பதைப் பற்றிய பரிசோதனை தான் இது. 

தேவைப் படும் பொருட்கள்: 

 1. ஊசியுடன் கூடிய சிரஞ்சு
 2. ஊசி
 3. பால்பயிண்ட் ரீஃபில்
 4. இறுக்கமான ரப்பர் மூடியுடன் கூடிய சிறிய கண்ணாடி பாட்டில். 

வீடியோ படத்தில் விளக்கி உள்ளது போல் ஜெட் நீர் வீழ்ச்சியை உருவாக்கவும். 

இந்தப் பயிற்சியைச் செய்வதற்குப் பயன்படும் வகையில் கீழே இரண்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 

தேவையான பொருட்கள்:

 1. 4 செ.மீ. விட்டமுள்ள 30 செ.மீ. நீள பி.வி.சி பைப்
 2. இரண்டு 1/2 லிட்டர் பாட்டில்கள்.

30 செ.மீ. அளவுள்ள பி.வி.சி. பைப்பை எடுத்துக் கொள்ளவும். அதன் ஒரு முனையை 45 கோணத்தில் குறுக்காக வெட்டவும். இந்த பைப்பை 45 0   கோணத்தில் வெட்டிய அடிப்பாகத்தில் நிற்க வைக்க முடியாது. 

அந்தப் பைப்பில் படத்தில் காட்டியபடி இரண்டு துளைகள் போடவும்.

நீர் நிரப்பிய பிளாஸ்டிக் பாட்டிலை அந்த துளையில் நிறக வைக்கவும். இப்போது பைப் கீழே விழாமல் நிற்கும் விந்தையைக் காண்பீர்கள். 

தேவையான பொருள்: ஒரு A-4 காகிதம் - ஒரு பக்கம் கருப்பு, மறுபக்கம் வெள்ளை நிறமுள்ள காகிதம்.

ஒரு செவ்வக வடிவ பெட்டியை பசை இன்றியும், கத்திரிக்கோலால் வெட்டாமலும், செய்வது தான் இதன் சிறப்பு அம்சமாகும். 

இந்த நீளமான பெட்டியில் பென்சில்கள், பேனாக்கள், மார்க்கர்கள் போன்றவைகளை வைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். 

வீடியோ படத்தில் விளக்கியபடி, பேப்பரை மடித்தும், சொருகியும் செய்து, செவ்வப் பெட்டியைச் செய்யவும். 

பரிசோதனைக்குத் தேவையான பொருட்கள்:

 1. காலியான மினரல் வாட்டர் பாட்டில்.
 2. நூல்
 3. எம்-சீல் (மிகவும் சக்தி வாய்ந்த பசை)
 4. இரண்டு வளையாத சிறிய ஸ்ரா துண்டுகள்.

வீடியோ படத்தில் விளக்கியபடி செய்து, பாட்டிலில் கட்டிய நூலை தூக்கிப் பிடித்துக் கொண்டால், பாட்டிலில் நிரப்பிய தண்ணீர் நேர் எதிராக அமைக்கப்பட்ட இரண்டு ஸ்ராக்களின் மூலமாக தண்ணீர் வேகமாக வெளியேறும் போது, பாட்டில் நன்கு சுழலும். 

தேவைபபடும் பொருட்கள்: 

 1. பென்சில் அட்டைப் பெட்டி
 2. இரண்டு முகம் பார்க்கும் சிறிய கண்ணாடித் துண்டுகள்
 3. இரண்டு ரப்பர் துண்டுகள்
 4. பசை
 5. கத்தரிக்கோல்

வீடியோ படத்தில் விளக்கியவாறு, இரண்டு முகம் பார்க்கும் சிறிய கண்ணாடித் துண்டுகளை 45 டிக்கிரி கோணத்தில் அமைத்து, பெரிஸ் கோப்பை உருவாக்கவும். 

அதை வைத்து, கீழே இருந்த படியே மேலே உள்ள பொருட்களை நீங்கள் பார்க்க முடியும். 

பக்கங்கள்

19281 registered users
7632 resources