அறிவியலும், தொழிலுட்பமும்

"சுமையற்ற கல்வி" அறிக்கை(1993) ன் படி பள்ளிக்கல்விக்கான தேசிய கலைத்திட்ட வடிவமைப்பினை (NCFSE)-மறுபரிசீலனை செய்யவேண்டியிருந்ததால் பேராசிரியர் யஷ்பால் அவர்களின் தலைமையில் 21 வல்லுநர்களைக் கொண்ட இதற்கான தேசிய வழிநடத்தும் குழு அமைக்கப்பட்டது. உயர் கல்வி ஆசிரியர்கள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனங்கள், தேர்வு வாரியங்கள், கிராம ஆசிரியர்கள், பொதுமக்கள் போன்றோரின் கருத்துகளுக்கேற்ப தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு திருந்திய வடிவம் பெற்றது.

தமிழில் மொழிப்பெயர்த்ததற்கு ஒருங்கிணைத்தவர் திரு. அ. வள்ளிநாயகம் அவர்கள்.

 

நுண்ணுயிரியலில் பாடத்தில் உள்ள பாக்டீரியா பூஞ்சை போன்ற பல்வேறு நுண்ணுயிரிகளின் அமைப்புகளையும் பயன்பாடுகளையும் தீமைகளையும் செயல்படுகின்ற பரவும் விதத்தினை இங்கு பவர்பாயிண்டாக அமைத்து காணொளிக்காட்சியாக அமைத்துள்ளேன்.

இக்காணொளிக்காட்சியில் உயிரற்ற உலகில் உயிருள்ள ஜீவராசிகள் எவ்வாறு உருவாயின என்பதைப் பார்க்கலாம்.

நன்றி: vigyan prasar

இந்த கானொளியில் " பூமி எவ்வாறு உருவானது?" என்பதைக் காணலாம் . இதனை vigyan prasar வழக்கினார்கள்.

தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் இணையப் பயன்பாடு எனும் இக்கட்டுரை மூலம் அனைத்து பள்ளிகளிலும் இணைய வழி கற்றலை மேம்படுத்த முடியும்.

தேவையான பொருட்கள்:

  1. ஒரு வட்ட வடிவமான கண்ணாடிப் பாத்திரம்
  2. ஒரு பிளாஸ்டிக் பிளேட்
  3. ஆறு ஒரே அளவான நாணயங்கள்

வீடியோவில் விளக்கியபடி கண்ணாடி பாத்திரத்தில் நீர் நிரப்பி பிளேட்டில் தலைகீழாக கவிழ்த்து வைக்கவும்.

பிறகு கண்ணாடிப் பாத்திரத்தின் எதிர் எதிரான மூன்று பக்கங்களில் மெதுவாக ஒவ்வொரு நாணயமாக ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு நாணயங்களை நுழைக்கவும்.

இப்பொழுது கண்ணாடிப் பாத்திரத்தின் விளிம்பிற்கும், பிளேட்டிற்கும் இடையே சுமார் 3 மி.மீட்டர் அளவு இடைவெளி இருப்பினும், நீர் வெளியே வராது.

பரப்பு இழுவிசையால் நீரின் உப்பும் தன்மை (Water Bulging due to Surface Tesnion)  என்ற அறிவியல் தத்துவம் ஒரு சிறிய பரிசோதனையில்  தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.  

தேவையான பொருட்கள்:

1.   கலர் தண்ணீர்

2.   கண்ணாடி பாத்திரம்

3.   சில உலோக நாணயங்கள்

4.   மை நிரப்பி (Ink filler)

தீக்குச்சியை வைத்து மெக்கானோ (Meccano)  மாதிரி வடிவங்களை அமைத்துச் செய்யும் ஒரு அற்புதமான அறிவியல் விளையாட்டுப் பயிற்சியாகும் இது. 

இந்த வீடியோ ஒரு வேதியல் பொருளைக் கொண்டு செய்யும் ஒரு வேடிக்கையான செயல்பாடாகும். 

தேவையான பொருட்கள்: 

  1. 3 வடிதாள்கள் (Filter Paper)
  2. கோபால்ட் குளோரைட் கரைசல் ( Cobalt chloride soltuin)
  3. பிரஷ் (Brush)

வெள்ளை நிறமுள்ள மூன்று வடிதாள்களை கோபால்ட் குளோரைட் கரைசலில் நனைத்து உலர வைக்கவும். உலர்ந்தவுடன் அதன் நிறம் நீலநிறமாக மாறும். 

பிறகு பிரஷால் நீரில் நனைத்து அந்த நீல நிறத்தாள்களில் எழுதினால், நீரால் எழுதிய எழுத்துக்கள் இளஞ்சிவப்பு நிறமாகக் காட்சி அளிக்கும் விந்தையைக் காண்பீர்கள். 

இது யாரோ மிருக வதையைத் தடுக்கும் அமைப்பினர் எழுப்பும் கேள்வி என்று நினைக்க வேண்டாம்.  இந்தக் கேள்வியை எழுப்பியது பல்கலைக் கழக மான்ய கழகம் (University Grants Commission) என்று சொன்னால், பலருக்கும் ஆச்சரியமாகவும், நம்பமுடியாததாகவும் படும். ஆனால் அந்தக் கழகம் உயர்நிலைக் கல்லூரிகளில் பிராணிகளை வெட்டி, ஆய்வு செய்யும் பயிற்சிகளை தடை செய்து ஒரு உத்தரவை 2011 ஆண்டே பிறப்பித்துள்ளது. இந்த உயிர்க்கொலைகளை ஒழுங்கு படுத்துவதற்கு சில பரித்துரைகளைச் சொல்லி இருக்கிறது.

பக்கங்கள்

19281 registered users
7632 resources