கோடுகளைப் போன்று வடிவங்களும் எங்கும் உள்ளது! இச்செய்முறைத்தாளைப் பயன்படுத்தி குழந்தைகள் அவர்களைச் சுற்றியுள்ள வடிவங்களைக் கண்டறிந்து, அவர்களாகவே சில சாதாரணமான வடிவியல் வடிவங்களை உருவாக்கலாம்.
பகா எண்களின் வரலாறு, சுழி பகா எண்ணா? முடிவில்லா பகா எண்கள், இரட்டை பகா எண்கள் முதலியவற்றை எடுத்துக்காட்டுகளுடன் இக்கட்டுரையில் விளக்கியுள்ளார், ஆசிரியர். கோ. துளசி, புதுச்சேரி.
இக்கட்டுரை "திசைமானி"(பாதை-2, பயணம்-2) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
பெருக்கல் என்பது தொடர் கூட்டலே என்பதை மாணவர்களுக்கு கண்டு உணர வைப்பதற்காக, 6 செயல்பாடுகள் மூலம் எடுத்துகாட்டுகிறார் ஆசிரியர் கோமதி, சவராயலு நாயகர் அ.பெ.தொ.பள்ளி, புதுச்சேரி.
இது "திசைமானி"(பாதை-2, பயணம்-1) என்ற அசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. வெளியீட்டு எண்:6(பாதை-2, பயணம்-2).
இப்புத்தகத்தில் பாஸ்கரசார்யாவின் "லீலாவதி"யை முன்னுரையாக கொண்டு, நேரத்தைப் பற்றியும், பணத்தைப்பற்றியும் விளக்கி, அது தொடர்பான கணக்குகளையும், அதற்குறிய விடைகளையும் வழங்கப்பட்டுள்ளது. எழுதியவர்:மாலா குமார்; வரைபடம்: உபேஷ், ஏஞ்ஜி; தமிழாக்கம்: எஸ். ஜெயராமன்
உருவங்களைப் பற்றியும், விவரங்கள் பற்றியும் மிக எளிய முறையில் இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. எழுதியவர்: மாலா குமார்; வடிவமைத்தவர்: உமேஷ், ஏஞ்ஜி; தமிழாக்கம்: எஸ். ஜெயராமன்.
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?