மொழி

தவறுகளின்றித் தமிழை எழுதுவதற்குரிய வழிகாட்டி என்ற உத்தரவாதம் நூலின் முகப்பிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. இது உயர் வகுப்புக்கான மொழி நூலாகும்.

பறவைகளின் தமிழ்ப் பெயர்களுடன் ஆங்கிலப் பெயர், அறிவியல் பெயர் ஆகியவற்றுடன் அவற்றின் வழக்கு பற்றிய ஆதாரமும் தரப்பட்டுள்ளன.

இப் பறவைப் பட்டியல் பறவைகளைப் பாகுபாடு செய்து முறைப்படுத்திய குடும்பங்களின் வ்ரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளது.

வடமொழிச் சொற்கள் கலக்காமல் பேசவும் எழுதவும் வித்திட்டவ்ர்களில் முக்கிய பங்கு வகித்தவர் தனிச் தமிழ்ப் பேராசிரியர்  என்று புகழப்படும் மறைமலையடிகளாவார். இந்த நூலை இயற்றியவர் மறைமலையடிகளின் மகளான சென்னை நார்த்விக் மகளிர் கல்லூரித் தமிழாசிரியராக இருந்த திருவாட்டி தி. நீலாம்பிகையம்மையாராவார். வெளியிட்டோர் - தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாகும். வெளியிட்ட தேதி: 18-9-1938.

இந்த விவரங்களிலிருந்து இந்த நூலின் சிறப்பு வெளிப்படுகிறது.

வடமொழிக் கலப்படமில்லாமல் தூய தனித் தமிழை ஆத்ரிக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு  இது ஒரு மிகச் சிறந்த அகராதியாகும்.

20-ம் நூற்றாண்டின் இந்தியாவின் ஒரு ஒப்பற்ற ஆன்மீக ஒளி விளக்காகத் திகழ்ந்த சுவாமி விவேகானந்தரின் விவேகக் கதைகள் 14 இந்த மின் இணைப்பில் உள்ளன.

 

ம்ஹா கவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளில் குயில் பாட்டு ஒரு முத்திரை பதித்த கவிதை நூலாகும்.

தமிழ் அன்னைக்கு அது ஒரு அபரணமாக அலங்கரிக்கும் இலக்கிய மாலை என்றால் மிகையாகாது.

இது ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒரு பொக்கிஷ நூல்.

இந்த மின் வலை நூல் தமிழ் க்யூப் என்ற மின் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு, வெளியிடப்படுகிறது. அன்னாருக்கு டீச்சசர்ஸ் ஆப் இந்திய நன்றி பாராட்டுகிறது.

 

தமிழ் இலக்கணத்தின் மூல நூல் தொல்காப்பியர் அருளிச் செய்த தொல்காப்பியமாகும். அந்த மூல நூல் தமிழ் க்யூப் மின் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இங்கு பிரசுரமாகி உள்ளது. படித்துப் பயன்பெற விழைகிறோம்.

தொல்காப்பியம்

முதல் பாகம் - எழுத்ததிகாரம்

தலைப்பு                                           விதிகளின் எண்ணிக்கை

ஒளவையாரின் நீதி நூல்கள் மாணவர்களுக்கு உரை ஆசிரியர்களின் உதவி இல்லாமல் புரியும் வண்ணம் அமைந்த மிகவும் எளிமையும், இனிமையும் கொண்டவைகள். 

காலத்தால் வென்று தற்காலத்திற்கும், எக்காலத்திற்கும் பொருத்தமான நீதிகளை உரைக்கும் தன்மையால் ஒளவையின் நூல்கள் சிறப்பாகக் கருதப்படுகின்றன. ஒளவையின் உவமைகள் உள்ளத்தைக் கவரும். சொல் வளம், பொருள் வளம், இசை வளம் ஆகியவைகள் அனைத்தையும் ஒளவையின் பாக்களில் காணலாம். 

ஒளவையின் நான்கு நீதி நூல்கள் இங்கே உள்ளன.

திருக்குறள் தமிழ் வேதம் என்று பாராட்டப் படும் ஒரு உன்னதமான நூல்.

அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் - ஆகிய மூன்று அத்தியாயங்களின் பாக்களை மூன்று தனித்தனியான ஒலி நாடாவின் மூலம் நீங்கள் கேட்டு மகிழவுடன் கற்கவும். 

அத்துடன், திருக்குறளின் பாக்களைப் படிக்க வசதியாக 1330 பாக்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. 

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை.

மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்.

மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்" - என்று முடிக்கும் ஜெயபாரதியின் 'திருக்குறள்-ஒரு அறிமுகம்' என்ற முன்னுரையும் பாக்களின் எழுத்து வடிவத்தின் முகப்பில் காணலாம். 

கல்வி கற்பதின் அவசியத்தையும், அளவையும் அற்புதமாகவும், மிக மிக எளிமையாகவும் அதே சமயத்தில் மனதில் ஆழப்பதியும் படியும் சொன்ன கவிஞர்களில் உச்சியில் இருப்பவர் அவ்வையார். அவ்வையாரின் பாக்களைப் புரிந்து கொள்வதற்கு எந்த உரையாசிரியருடைய உதவியும் தேவையில்லை. அவ்வளவு எளிமை. அதீத இனிமையும் கூட.

இது சீனாவில் பிறந்த ஐந்து சகோதரர்களைப் பற்றிய ஒரு சுவரஸ்யமான கற்பனைக் கதை. ஐந்து சகோதரர்களும் ஒரே மாதிரி இருந்தனர். அவர்கள் ஐவரும் தங்கள் தாயுடன் கடற்கரையோரத்தில் ஒரு குடிசையில் வசசித்து வந்தார்கள். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பான சக்தி உண்டு. கடல் நீரை முழுங்குதல், இரும்பு கழுத்து, காலை இழுத்து நினைத்த அளவிற்கு நீளமாக்கல், தீயைனால் எரிக்க முடியாத உடல், மூச்சை பிடித்துக் கொண்டு எவ்வளவு நேரமானலும் இருக்கும் சக்தி - ஆகிய அசாதாரமான திறமைகளை படைத்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் எப்படி தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனகளிலிருந்து தப்பினார்கள் என்பது தான் கதை.

பக்கங்கள்

18332 registered users
7152 resources