மொழி

மொழித் திறனை வளர்க்க, நிறைய விளையாட்டுகளை கொண்டுள்ள இக்கட்டுரை, "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், நாள்காட்டியிலுள்ள குறிப்புகள் முதலியவற்றை அனைத்து குழந்தைகளும் வாசிக்க என்ன செய்யலாம் என்பதை இக்காணொளிக்காட்சி மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர். சாந்த குமாரி.

செய்யுள் பகுதியை கற்பிக்கும் முறை பற்றி படிப்படியாக விளக்கியுள்ளார், ஆசிரியர். சாந்தகுமாரி. எடுத்துகாட்டாக மூதுரை பாடலை நமக்கு இக்காணொளிக்காட்சி மூலம் கற்பித்துக்காட்டியுள்ளார்.

செய்யுள் பாடலை விளையாட்டு மூலம் எவ்வாறு கற்பிக்கலாம் என்பதை நமக்கு விளக்கியுள்ளார் ஆசிரியர். சாந்த குமாரி. இங்கு எடுத்துக்காட்டிற்கு மூதுரை பாடலை "ஆடு-புலி ஓட்டம்" மூலம் இக்காணொளிக்காட்சியில் விளக்கியுள்ளார்.

நூலகத்திலுள்ள பல் வேறு வகையான புத்தகங்களை வாசிப்பதன் மூலம் குழந்தைகள் கற்றல் மேன்பட தான் மேற்கொண்ட முயற்சிகளை இக்கட்டுரை மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர். பாட்சா(அ. தொ. ப., ஆண்டியார்பாளையம், புதுச்சேரி) அவர்கள்.

இக்கட்டுரை "திசைமானி"(பாதை-2, பயணம்-3 ) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

செய்தித்தாளை, வகுப்பறையில் கற்றல்-கற்பித்தல் கருவியாக எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என ஆசிரியர் ஶ்ரீபர்னா, இந்த பவர்பாயிண்ட்(powerpoint) நிகழ்வுக்காட்சி மூலம் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

நீர் சுழற்சி அறிவியல் வகுப்பறையில் கவிதை/பாடலாகப் பாடி குழந்தைகளுக்கு இனிமையான கற்றல் சூழலை ஏற்படுத்த ஒரு எடுத்துக்காட்டாய் இப்பாடல் வரிகள். 

இதனை ஒரு பணியிடைப்பட்டறையின் போது விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் படைத்தார்கள்.

தமிழ்மொழி நமது தாய் மொழி. அதை பிழையின்றி பேசவும் எழுதவும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும். இதில் ஒரு பள்ளியின் மேற்கொள்ளப்பட்ட தமிழ் கற்பித்தல் முறை, தனது வகுப்பறையில் மேற்கொண்ட ஒரு செயல்திட்டம், தமிழ் படிப்பதில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், அதை தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் என தனது அனுபவத்தை இக்கட்டுரை மூலம் நமக்கு அளித்தவர் ஆசிரியர். இரா. மணிகண்டன், அ.தொ.ப., இந்திராநகர், புதுச்சேரி.

இக்கட்டுரை "திசைமானி" பயணம்-2  என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் எளிதில் தொடர்பு படுத்தி அறியும் தன்மை உள்ள  தலைப்புகளையோ அல்லது அவர்களின் தினசரி வாழ்க்கையுடன் தொடர்புடைய தலைப்புகளையோ கொடுத்து அவைகளைப் பற்றி எழுத வைக்கும் போது, எழுதுவதே ஒரு விளையாட்டுப் போன்று அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் செயலாகிவிடும். போதிய சொல்வலமும், வர்ணனைத் திறனும் இல்லாத காரணத்தினால், குழந்தைகள் தங்கள் கருத்துக்களை எழுத்து வடிவில் வெளியிடத் தயங்குகிறார்கள். அந்தக் குறைகளை போக்குவதற்கு, இங்கே சில எழுத்துப் பயிற்சிகள் அவர்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ளன.

ஆர்வம் என்பது இயற்கையுடன் இணைந்த நீக்க முடியாத, வளர்ந்து வரக்கூடிய குணாதிசயமாகும்.  அந்தக் குணம் அனைத்துப் பிராணிகளிடம் இருப்பினும், மனிதர்களிடத்தில் அதிகமாகவே மிகவும் சிறந்து காணப்படும் ஒன்றாகும். இது மனிதர்களுடன் உடன்பிறந்த பண்பான  “அறிந்து கொள்ளுதல்”  என்ற ஆர்வக் கனலை (அதாவது, அறிவை) மூளையில் விட்டுவிட்டுச் சென்று விடுகிறது. அப்படிப்பட்ட அறிவு முடிவுற்றதாகவோ- (அதாவது திடமான விடையை அளிப்பதாகவோ) அல்லது கற்றுக் கொள்வதாகவோ - (அதாவது ஆர்வம் இருந்தாலும் இறுதியில்  எப்பொழுதும் ஒரு திருப்தியான விடை கிடைக்காத நிலையாகவோ) - அமைந்து விடும்.

பக்கங்கள்

18463 registered users
7224 resources