சுற்றுச் சூழல்

"உயிர்பண்மம் என்னும் பாடத்தை படிப்பதனால் மாணவர்களிடையே இந்த உலகில் வாழும் பல்வேறு வகையான தாவர, மற்றும் விலங்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் அவைகள் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்து இவ்வுலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் உயிர்வாழவும், மற்றும் உயிர் பண்மம் அழிவதனால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளைப் பற்றியும் மாணவர்களுக்குச் சிறப்பாக புரியவைக்க களப்பயணம் மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும்", என்று தனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் சக்கரவர்த்தி,அரசு நடுநிலைப் பள்ளி, கரியமாணிக்கம், புதுச்சேரி.

"மாணவர்கள் மதிய உணவு எடுத்துக்கொள்ளும் இடங்களிலும், தண்ணீர்க் குழாய்களுள்ள இடத்திலும், மின் பொத்தானுள்ள இடங்களிலும் முறையே "உணவை வீணாக்கக் கூடாது", "குடிநீரைச் சேமிக்க வேண்டும்", "மின்சாரத்தைச் சேமிப்போம்" போன்ற விளக்கப் படங்களை ஒட்டினேன். மீதமுள்ள இடங்களில் "மரம் வளர்ப்பு" மற்றும் "மரங்களின் பயன்கள்"ஐ விளக்கும் படங்களையும் ஒட்டினேன். இதன் விளவுகள் என்னென்ன?" என்பதனை இக்கட்டுரையில் விளக்கியுள்ளார் புதுச்சேரியிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளி-நல்லவாடு- ஆசிரியர். இந்துமதி.

இக்கட்டுரை "திசைமானி"(பயணம்-1) என்ற மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது.

மரங்களின் கட்டுமானம், இயற்கையில் அதன் முக்கியத்துவம் பற்றிய கோட்பாடுகளை வலியுறுத்துவதற்கு இந்தச் செயல்பாடுகள் உபயோகமாக இருக்கும். இதை நேரடியாக குழந்தைகளிடம் விநியோகிக்கலாம். செயல்பாடு ஆரம்பிப்பதற்கு முன்பு அவர்களுக்கு விளக்க வேண்டும்.

இது இலைகள் மட்டுமே தேவைப்படும் எளிய கைவினைச் செயல்பாடு ஆகும். இலைகளைக் கொண்டு வேலை செய்யும் போது தங்களைச் சுற்றியிருக்கும் வெவ்வேறு வகையான செடிகளையும்/மரங்களையும் குழந்தைகள் அறிந்து கொள்ள இது ஊக்குவிக்கிறது. இந்த அறிவு தாவரவியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் வகுப்புகளுக்கும் பயன்படும்.

18999 registered users
7423 resources