இது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-5, பருவம்-3, பாடம்-1லுள்ள "களப்பயணம் செல்வோம்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம். ஆசிரியர்கள் திரு. நல். கருணாநிதி மற்றும் திரு. இரா. கார்த்திகேயன் ஆகியோர், தாங்கள் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளனர்.
இது "திசைமானி"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
"உயிர்பண்மம் என்னும் பாடத்தை படிப்பதனால் மாணவர்களிடையே இந்த உலகில் வாழும் பல்வேறு வகையான தாவர, மற்றும் விலங்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் அவைகள் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்து இவ்வுலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் உயிர்வாழவும், மற்றும் உயிர் பண்மம் அழிவதனால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளைப் பற்றியும் மாணவர்களுக்குச் சிறப்பாக புரியவைக்க களப்பயணம் மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும்", என்று தனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் சக்கரவர்த்தி,அரசு நடுநிலைப் பள்ளி, கரியமாணிக்கம், புதுச்சேரி.
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?