ஒருங்கிணைந்த கற்றல்

செய்யுள் பகுதியை கற்பிக்கும் முறை பற்றி படிப்படியாக விளக்கியுள்ளார், ஆசிரியர். சாந்தகுமாரி. எடுத்துகாட்டாக மூதுரை பாடலை நமக்கு இக்காணொளிக்காட்சி மூலம் கற்பித்துக்காட்டியுள்ளார்.

செய்யுள் பாடலை விளையாட்டு மூலம் எவ்வாறு கற்பிக்கலாம் என்பதை நமக்கு விளக்கியுள்ளார் ஆசிரியர். சாந்த குமாரி. இங்கு எடுத்துக்காட்டிற்கு மூதுரை பாடலை "ஆடு-புலி ஓட்டம்" மூலம் இக்காணொளிக்காட்சியில் விளக்கியுள்ளார்.

வகுப்பறையில் நிகழ்ந்த கற்றல் வளர்ச்சியினையும் அதற்கு பயன்படுத்திய நாடக செயல்பாடுகளையும் இந்தகட்டுரை மூலம் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார், ஆசிரியர் ஈஸ்வரி, பொறையூர் பேட்டை, புதுச்சேரி.

இக்கட்டுரை "திசைமானி"(பயணம்-4) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

புதுச்சேரியின் ஆசிரிரியர்களான சோமசுந்தரம் மற்றும் அமுதன் ஆகியோர், பொம்மலாட்டத்தின் தங்கள் அனுபவங்களை இக்கட்டுரை மூலம் பகிர்ந்து கொள்கின்றனர்.

இது "திசைமாணி"-பயணம்-3, என்ற ஆசிரியர்களால் ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்படுகிற இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

நுண்கலை வேறு, பாடம் வேறு என்று எண்ணாமல் இவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தது என்பதை ஆசிரியர்களும் தெளிவு பெற வேண்டும். காகிதம், வீணான பொருட்கள், தூக்கிவீசி எறியும் பொருட்கள் என பல பொருட்களைக் கொண்டு நுண்களை எவ்வாறு கற்றுக்கொடுக்கலாம் என்பதை ஒவ்வொரு நுண்கலை ஆசிரியரும் அறிந்ததுதான். அதை அவர்கள் மற்ற பாட ஆசிரியர்களுக்கும் உதவும் விதத்தில், அவர்களோடு கலந்து விவாதித்து கலையை பாடத்தோடு தொடர்புபடுத்தி ஓவியமாகவோ, நாடகமாகவோ, பாட்டாகவோ, கதையாகவோ வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கும்படியான திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இக்கருத்தை தனது கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார், ஆசிரியர். பச்சையப்பன், அ.உ.ப.

கை தனியாக கால் தனியாக தலை தனியாக இருந்தால் பயனில்லை. அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்து உடலாக இருந்தால் தான் பயன்படும். அது போல, பாடங்களும் ஒன்றோடொன்று இணைந்திருத்தல் வேண்டும். இதனை இக்காணொளிக் காட்சியில் எடுத்துக் காட்டுடன் விளக்குகிறார் குழந்தைகள் நாடக நிபுணர் திரு. இராமானுஜம் அவர்கள்.

அடையாளங்காணுதலும், தங்களை வேரொருவராக பாவனை செய்வதும் நாடக்கத்தின் அம்சமாகும். " குழந்தை தன்னை வேருவராக பாதிப்பது ஆசையைக் காட்டிலும் அக்குழந்தை  அதனை சவாலாக எடுத்துக்கொண்டு அச்செயலில் ஈடுபடுகின்றது." இக்கருத்தை கல்வியாளர் ஜான் ஹால்ட் கூறியது போலவே, குழந்தைகள் நாடக நிபுணர் திரு. இராமானுஜம் அவர்கள் சில எடுத்துகாட்டுகளுடன் கூறுவதையும், நாடகம் எவ்வாறு ஆளுமை வளர்ச்சிக்குத் துணைபுறிகின்றது என்பதையும்  இக்காணொளிக் காட்சியில் பார்க்கலாம்.

குழந்தைகளிடையே படைப்பாற்றலை எவ்வாறு வளர்ப்பது என்பதையும் அனைத்துக் குழந்தைகளையும் எவ்வாறு நாடகத்தில் உள்ளடக்குவது என்பதையும் தனது அனுபவம் மூலம் இக்காணொளிக் காட்சியில் விளக்கிக் கூறியுள்ளார் குழந்தைகள் நாடக நிபுணர், திரு. இராமானுஜம் அவர்கள்.

திரு. இராமானுஜம் அவர்கள் தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்து, தற்போது அரசு பணி ஓய்வு பெற்றவர். இவருடைய கருத்துக்களை கேரள மாநிலக் கல்வித்துறை, தனது மாநிலக் கல்வித்திட்டத்தில் உள்ளடக்கியுள்ளது.

 

"குழந்தைகளின் திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், அவர்களுடைய வெளிப்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். திறமைகள் திறமைகளாகவே இருந்தால் அர்த்தமில்லாமல் போய்விடும். திறமைகள் பயன்படும் பொருட்களாக மாறவேண்டும். " இவ்வாறு குழந்தைகளின் படைபாற்றல் பற்றியும் வெளிப்பாடுகள் பற்றியும், அதனை மேம்படுத்த நாடகம் எவ்வாறு துணைபுறிகின்றது என்பது பற்றியும் இக்காணொளிக் காட்சியில் குழந்தைகள் நாடக நிபுணர் பேராசிரியர் திரு.இராமானுஜம் கூறுவதைப் பார்க்கலாம்.

18464 registered users
7224 resources