உணவுத்திருவிழா

இது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-5, பருவம்-2, பாடம்-2லுள்ள "உணவுத்திருவிழா" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம்.  ஆசிரியர் திரு. இரா. கார்த்திகேயன் அவர்கள், தான் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம்   பகிர்ந்துள்ளார்.

இது "திசைமானி"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

       ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், சில வருடங்களுக்கு முன்னர் புதர்களாக, ஆடு மாடுகள் மேய்க்கப்படும் இடமாக, காலைக்கடன்களை முடிக்கும் இடமாக இருந்தது. மாணவ மணிகளின் வருகையோ மிக குறைவாக(20-30) இருந்தது. கிரமாத்தில் அடிக்கடி எதேனும் ஒரு திருவிழா/கிடா வெட்டு இருந்துகொண்டே இருப்பதால் குழந்தைகளும் மதிய உணவை அங்கேயே உட்கொண்டு மாலை வேளைகளில் வெளியூருக்கு சென்று வேலை செய்யும் வீடு திரும்பும் நேரத்தில் இக்குழந்தைகளும் வீட்டிற்கு சென்று விடுவர்.

தமிழ்
18624 registered users
7274 resources