ஆசிரியர் மேம்பாடு

அஞ்சல்காரர் வழியே கடிதங்களைப் பெறுவது என்பது ஒரு பழங்கதையாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்க, ’உன் அஞ்சல் பெட்டியில் என்ன’ என்ற பாடத்திட்டத்தின் மூலம் பல புதுமையான முயற்சிகளை விளக்குகின்றார் ஓர் ஆசிரியர். இந்தியாவில் பெண் கல்விக்கு வித்திட்ட முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே அவர்களின் புத்தகத்தைப் படித்து அதிலிருந்து கிடைத்த அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார் மற்றொரு ஆசிரியர்.

"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது.  வெளியீட்டு எண்:7(பாதை-3, பயணம்-1).

இந்தியக் கல்வியைப் பற்றி சமீப காலங்களில் வந்த அனைத்துச் செய்திகளும் நமது பள்ளிக் கல்வியின் செயல்பாடுகளில் உள்ள மோசமான குறைபாடுகளைப் பற்றித் தான் தெரிவிவிக்கின்றன. முதலில் “விப்ரோ – கல்வி கற்பிப்பதில் ஆர்வம்” பற்றிய ஆய்வு அறிக்கையை எடுத்துக் கொண்டால், 2006- ஆண்டு நிலையை விட 2011-ன் நிலை படு மோசமாகி இருப்பதைத் தான் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அரசாங்கப் பள்ளிகளின் நிலையோ இன்னும் மிகவும் கவலை அளிக்கும் படி இருக்கிறது. ஆனால், மிகவும் பணம் படைத்த தனியார் பள்ளிகளும் எந்த விதத்திலும் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதையும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

19524 registered users
7758 resources