அறிவியல்

"சில பாட புத்தகங்களில் “நற்பகல்” என்பது சூரியன் தலைக்கு நேராக இருக்கும் நேரம் என்று குறிப்பிட்டிருக்கும். உண்மையில் சொல்லப்போனால் அது தினமும் காண முடியாத/ தினமும் நிகழாத ஒன்றாகும்." அவ்வாறெனில் உண்மையில் உச்சியில் சூரியன் எப்போது இருக்கும்?

இதற்கான பதிலை, IUCAA ஐ(The Inter-university centre for Astronomy and Astrophysics- வானவியல் மற்றும் வான இயற்பியலுக்கான அனைத்துப்பல்கலைக்கழகம், பூனே ) சார்ந்த அரவிந்த் அவர்கள் எழுதிய "zero shadow moment" என்ற கட்டுரையில் காணலாம். அதை தழுவி தமிழாக்கம் செய்யப்பட்டதே இக்கட்டுரை.

ஒரு சிறு நாடகம் மூலம் எவ்வாறு அறிவியல் மனப்பான்மையை குழந்தைகளிடத்தில் கொண்டு சேற்றார், என தனது அனுபவத்தை விளக்குகிறார் ஆசிரியர் அனிதா. இது திசைமானி (பாதை-2, பயணம்-4) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது

"உயிர்பண்மம் என்னும் பாடத்தை படிப்பதனால் மாணவர்களிடையே இந்த உலகில் வாழும் பல்வேறு வகையான தாவர, மற்றும் விலங்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் அவைகள் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்து இவ்வுலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் உயிர்வாழவும், மற்றும் உயிர் பண்மம் அழிவதனால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளைப் பற்றியும் மாணவர்களுக்குச் சிறப்பாக புரியவைக்க களப்பயணம் மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும்", என்று தனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் சக்கரவர்த்தி,அரசு நடுநிலைப் பள்ளி, கரியமாணிக்கம், புதுச்சேரி.

"நீர் பாதுகாப்பு" என்ற படத்தை செயல்முறையுடன் பாடத்திட்டத்தின் எடுத்துக் காட்டாக விளக்கி கூறியுள்ளார், தலைமை ஆசிரியர். ஆரோக்கியம்மாள், அபிஷேகபாக்கம், புதுச்சேரி.

இது "திசைமானி"(பாதை-2, பயணம்-2) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

நோய்களை தடுப்பதும், ஆரோக்கியத்தை வளர்ப்பதுமே சிறந்த உடல்நலனை பெறுவதற்கான வழிகள். நம் உடல் அமைப்புக்குத் தேவையான முழு சக்தியையும் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளடங்கிய ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மூலம் பெறலாம். ஊட்டச்சத்துக்கள் தேவையான விகிதத்தில் இல்லாவிட்டால், அது குறைபாட்டிற்கும், மோசமான உடல்நிலைக்கும் வழிவகுக்கும். பெரியோர்களை காட்டிலும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆகையால், ஆரோக்கியமான வாழ்விற்கு சரியான விகிதத்தில் உள்ள ஊட்டச்சத்து மிக்க உணவு அத்தியாவசியம் என்பதை நம் குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டும்.

நுண்ணுயிரியலில் பாடத்தில் உள்ள பாக்டீரியா பூஞ்சை போன்ற பல்வேறு நுண்ணுயிரிகளின் அமைப்புகளையும் பயன்பாடுகளையும் தீமைகளையும் செயல்படுகின்ற பரவும் விதத்தினை இங்கு பவர்பாயிண்டாக அமைத்து காணொளிக்காட்சியாக அமைத்துள்ளேன்.

நீர் சுழற்சி அறிவியல் வகுப்பறையில் கவிதை/பாடலாகப் பாடி குழந்தைகளுக்கு இனிமையான கற்றல் சூழலை ஏற்படுத்த ஒரு எடுத்துக்காட்டாய் இப்பாடல் வரிகள். 

இதனை ஒரு பணியிடைப்பட்டறையின் போது விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் படைத்தார்கள்.

இந்த கானொளியில் " பூமி எவ்வாறு உருவானது?" என்பதைக் காணலாம் . இதனை vigyan prasar வழக்கினார்கள்.

"ஆயிஷா"-ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை; இதை திரு. இரா. நடராஜன் அவர்கள் படைத்துள்ளார். இது ஒரு உண்மைக் கதை.தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது. இந்நூல் 8 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வல்லரசு நாடு இந்தியாதான் !” ”இந்தியா அறிவியல் முன்னேற்றத்தில் எங்கோ சென்றுவிட்டது”  என்ற கோஷங்களை சொல்லி சாதாரண மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் நிகழ்வே நம் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போதைய நாட்டின் நிலவரத்தை சிறிதளவு கூர்ந்து கவனித்து சிந்தித்தோமானால் இவை எவ்வளவு நகைப்புற்குரிய கோஷங்கள் என்று ஒரு சாமான்யனாலேயே புரிந்து கொள்ள முடியும்.

18934 registered users
7394 resources