சுற்றுச் சூழல் அறிவியல்

இந்தச் செய்முறைத்தாள் சிறந்த எதிர்காலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு  மாணவர்களுக்கு கீழ்க்கண்டவைகளைப் புரிய வைக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

  1. பல்வேறு வகையான எரிபொருட்கள்
  2. எரிபொருளின் அவசியம்
  3. பல்வேறு உத்திகளின் மூலம் எரிபொருட்களை பாதுகாத்தல் மற்றும் திறமிக்க முறையில் பயன்படுத்துதல்.

 

 

 

 

இந்தப் பயிற்சித் தாள் மண்ணின் தன்மைகளை ஒரு புதுமையான முறையில் மாணவர்கள் கற்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மண், மண்ணின் பல வகைகள், மற்றும் மண்ணின் பிற தன்மைகளான மண் அரிப்பு போன்றவைகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பயிற்சித் தாளைப் பயன்படுத்தலாம்.

இந்த பாடத்திட்டத்தின் மூலம், ஆசிரியரால் இயற்கைப் பிரதேசங்கள் உருவாவதற்கு காரணமான காரணிகளை மாணவர்களுக்குப் புரிய வைக்க முடியும்.

அரிய வளமாகிய தண்ணீரின் மதிப்பு பற்றி குழந்தைகளுக்கு கற்பிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்தப் பாடத் திட்டத்தில் தண்ணீரின் மூலாதாரங்கள், பயன்கள், தண்ணீர் சுழற்சி, அதில் ஏற்படும் மாசு மற்றும் அதனை பாதுகாத்தல் பற்றிய கோட்பாடுகள் கூறப்பட்டு இருக்கின்றன. 

இங்கே கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் அனைத்தும் ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்ட முறையில் ஆசிரியர் ஈடுபாடுத்தும் வகையில் அமைந்துள்ளன. ஏனெனில் இதற்குத் தேவையான பொருட்கள் அன்றாடம் உபயோகிக்கத்தில் உள்ளவைகளாகும். இந்த செய்முறைப் பயிற்சிமூலம் மாணவர்களின் உற்சாகம் வெளிப்படுவதை நீங்கள் உணருவீர்கள்.

மரங்களின் கட்டுமானம், இயற்கையில் அதன் முக்கியத்துவம் பற்றிய கோட்பாடுகளை வலியுறுத்துவதற்கு இந்தச் செயல்பாடுகள் உபயோகமாக இருக்கும். இதை நேரடியாக குழந்தைகளிடம் விநியோகிக்கலாம். செயல்பாடு ஆரம்பிப்பதற்கு முன்பு அவர்களுக்கு விளக்க வேண்டும்.

இது இலைகள் மட்டுமே தேவைப்படும் எளிய கைவினைச் செயல்பாடு ஆகும். இலைகளைக் கொண்டு வேலை செய்யும் போது தங்களைச் சுற்றியிருக்கும் வெவ்வேறு வகையான செடிகளையும்/மரங்களையும் குழந்தைகள் அறிந்து கொள்ள இது ஊக்குவிக்கிறது. இந்த அறிவு தாவரவியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் வகுப்புகளுக்கும் பயன்படும்.

பூமி வெப்பமடைந்து வருவது ஒரு நிதர்சன உண்மை. அதைத் தடுத்து நிறுத்த நீங்கள் உதவமுடியும். இந்த உண்மையினை உணர்த்த பிரேசில் நாட்டு இயற்கைக்கான உலகலாவிய நிதியம் 30 நிமிடங்களே ஓடக்கூடிய ஒரு ஒப்பற்ற அனிமேஷன் வீடியோ படத்தை வெளியிட்டுள்ளது.

தேவைப்படும் பொருட்கள்:

'சிறு துளி பெரு வெள்ளம்' என்பது ஒருவரின் விடா முயற்சியைக் குறிப்பதாகும்.

'சிறுதுரும்பும் பல் குத்த உதவும்' என்பது சிறிய முயற்சியானாலும், அதை உதாசீனம் செய்யக் கூடாது என்பதை இந்தப் பழமொழி சுட்டிக் காட்டுகிறது.

பக்கங்கள்

19181 registered users
7449 resources