சுற்றுச் சூழல் அறிவியல்

செய்தித்தாளை, வகுப்பறையில் கற்றல்-கற்பித்தல் கருவியாக எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என ஆசிரியர் ஶ்ரீபர்னா, இந்த பவர்பாயிண்ட்(powerpoint) நிகழ்வுக்காட்சி மூலம் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ்

"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது.  வெளியீட்டு எண்:6(பாதை-2, பயணம்-2).

இக்காணொலிகாட்சி புதுவை அறிவியல் இயக்கத்தின் "துளிர் இல்ல"த்தின் செயல்பாடுகளில் ஒன்றான விளையாட்டு மூலம் அறிவியலைக் கற்றலின் ஒரு வகை விளையாட்டான, கற்றுத் தடை பற்றி சிரிய காகித அட்டைத் துண்டு மூலம் குழந்தைகள் கற்ற போது காட்சியாக்கப்பட்டது.
 
நன்றி: தமிழ்நாடு/புதுவை அறிவியல் இயக்கம்
இக்காணொலிகாட்சி புதுவை அறிவியல் இயக்கத்தின் "துளிர் இல்ல"த்தின் செயல்பாடுகளில் ஒன்றான விளையாட்டு மூலம் அறிவியலைக் கற்றலின் ஒரு வகை விளையாட்டான, ஒலி அதிர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள நூலை வைத்து ஒலி விளையாட்டை குழந்தைகள் கற்ற போது காட்சியாக்கப்பட்டது.
 
நன்றி: தமிழ்நாடு/புதுவை அறிவியல் இயக்கம்

நோய்களை தடுப்பதும், ஆரோக்கியத்தை வளர்ப்பதுமே சிறந்த உடல்நலனை பெறுவதற்கான வழிகள். நம் உடல் அமைப்புக்குத் தேவையான முழு சக்தியையும் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளடங்கிய ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மூலம் பெறலாம். ஊட்டச்சத்துக்கள் தேவையான விகிதத்தில் இல்லாவிட்டால், அது குறைபாட்டிற்கும், மோசமான உடல்நிலைக்கும் வழிவகுக்கும். பெரியோர்களை காட்டிலும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆகையால், ஆரோக்கியமான வாழ்விற்கு சரியான விகிதத்தில் உள்ள ஊட்டச்சத்து மிக்க உணவு அத்தியாவசியம் என்பதை நம் குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் ஒவ்வொருவருக்கும் அற்புதமான உடல் உள்ளது. ஆனால் அது என்ன சொல்கிறதென்று நாம் கேட்கிறோமா?

எழுதியவர்: நோனி; வரைபடம்: ஏஞ்ஜி, உபேஷ்; தமிழாக்கம்: எஸ்.ஜெயராமன்

"சுமையற்ற கல்வி" அறிக்கை(1993) ன் படி பள்ளிக்கல்விக்கான தேசிய கலைத்திட்ட வடிவமைப்பினை (NCFSE)-மறுபரிசீலனை செய்யவேண்டியிருந்ததால் பேராசிரியர் யஷ்பால் அவர்களின் தலைமையில் 21 வல்லுநர்களைக் கொண்ட இதற்கான தேசிய வழிநடத்தும் குழு அமைக்கப்பட்டது. உயர் கல்வி ஆசிரியர்கள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனங்கள், தேர்வு வாரியங்கள், கிராம ஆசிரியர்கள், பொதுமக்கள் போன்றோரின் கருத்துகளுக்கேற்ப தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு திருந்திய வடிவம் பெற்றது.

தமிழில் மொழிப்பெயர்த்ததற்கு ஒருங்கிணைத்தவர் திரு. அ. வள்ளிநாயகம் அவர்கள்.

 

ஒருங்கிணைந்த கற்றல்

By editor_ta | டிச 17, 2013

(உதாரணத்திற்கு) : அறிவியல் பாடமான நீர் சுழற்சி பற்றி நடத்தும் போது, தமிழ் மொழியில் அது தொடர்பான கவிதை ஒன்று(கீழே கொடுக்கப்பட்டது போல) பாடலாக பாடி குழந்தைகளுக்கு இனிமையான (அறிவியலும் தமிழ் மொழியையும் ஒருங்கிணைந்த) கற்றல் அனுபவத்தை ஏற்படுத்தும் முயற்சியை விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் மேற்கொண்டனர். அக்கவிதை/பாடல்:

நீர் சுழற்சி

மழைநீர்-மனிதனின் உயிர் நீரே

உன் மீள் சுழற்சியால்-நாங்கள்

உயிர் பெற்றோம்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

அதுபோல்

உத்திரகாண்டில் ஆக்கமும் நீ, அழிவும் நீ

பக்கங்கள்

19181 registered users
7449 resources