உங்கள் பள்ளி சுற்றுச்சுழல் தோழமையுடன் எவ்வாறு உள்ளது என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.
பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் (Bombay Natural History Society) அருமையான வெளியீடான இன் ஹார்மனி வித் நேட்சர் (In harmony with nature-இயற்கையோடு இணக்கம்) என்ற புத்தகத்தின் மஹாராஷ்டிராவில் நிலையான வாழ்க்கையை வாழ கற்றல் என்ற தலைப்பிலுள்ள ஆசிரியர்கள் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது தான், இந்த கணக்கெடுக்கும் தாள்.
இந்த 11 பயிற்சித்தாளின் தொகுப்பு, நான், எனது குடும்பம், எனது உடல்,எனது உணர்வுகள் மற்றும் எனது வீடு போன்ற கருப்பொருட்களை குழந்தைகள் புரிந்துணர உதவும்படி வடிவமைக்கப்பட்டது.
வகுப்பறைகளில் குழந்தைகள் பேச வாய்ப்பளிக்கிறோமா? விவாதங்கள் நடைபெறுகிறதா? அத்தகைய விவாதங்களுக்கு ஆசிரியராகிய நாம் எத்தகைய வகுப்பறைச்சூழலை உருவாக்க வேண்டும்? இங்கு பகிருங்கள்.
சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-4, பருவம்-2, பாடம்-2 ல் உள்ள "ஒளிமயமான எதிர்காலம்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் உருவாக்கியுள்ளனர். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.
"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?