சிறப்பு பாடத்திட்டம் அறிமுகம்

சராசரி குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் கல்வி கற்கும் வகையில் சிறப்பு பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று அனைவரும் கல்வி இயக்கத்தின் துணை இயக்குநர் எஸ். நாகராஜன் கூறினார். தமிழக அரசு மற்றும் அனை வருக்கும் கல்வி திட்டம் சார்பில் சிறப்பு 
தேவையுள்ள குழந்தை களுக்கு உள்ளடக்கிய கல்வி கற்றுத் தரும் சிறப்பு ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் சென்னையில் உள்ள கல்வி இயக்குநரகத்தில் நேற்று தொடங்கியது. இதில் 30 மாவட்டங்களில் இருந்து மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பாடம் கற்றுத்தரும் 60 சிறப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மூளை முடக்குவாதம், கண் பாதிப்பு, காது பாதிப்பு, ஆட்டி சம், செரிபரல் பால்ஸி போன்ற குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன கருவிகள் மூலம் எப்படி பாடம் கற்றுத் தருவது, எளிமையாக புரியும் வகையில் எவ்வாறு பாடம் சொல்லித் தருவது என்பது குறித்து கற்றுத்தரப்படுகிறது. இதற்காக 10 தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்து சிறப்பு பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் துறையின் துணை இயக்குநர் எஸ்.நாகராஜன் கூறியதாவது: அனைத்து மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். இவர்கள் படிப்பதற்கு தேவையான அனைத்தும் துறை சார்பாக அங்கன்வாடி பள்ளிகளில் இருந்தே ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் மற்ற குழந்தைகளுடன் கல்வி கற்கும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத் திட்டத்தை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் சராசரி பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதற்கு ஏதுவாக 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வரும் டிசம்பர் மாதத்தில் 5 நாட்கள் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Date: 
சனி, நவம்பர் 22, 2014 - 6:30am
Source: 
http://alleducationnewsonline.blogspot.in/2014/11/blog-post_72.html
18783 registered users
7333 resources