குடியுரிமையை கற்றுக் கொடுத்தல்

Resource Info

Basic Information

குழந்தைகளுக்கு அவர்களின் சுற்றுச்சூழல் பற்றி யோசிக்க தூண்டும் சூழ்நிலைகளை உருவாக்கி தருவதன் மூலம் நல்ல குடிமகனாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை மிக எளிமையாகக் கற்றுக் கொடுக்க முடியும். இத்தகைய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த அவர்கள் ஒன்றாக இணைந்து தெளிவான முடிவுகளை எடுத்து, தன்னை சுற்றியுள்ள சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .

Lesson plan Details

Duration: 
00 hours 40 mins
முன்னுரை: 

குழந்தைகளுக்கு அவர்களின் சுற்றுச்சூழல் பற்றி யோசிக்க தூண்டும் சூழ்நிலைகளை உருவாக்கி தருவதன் மூலம் நல்ல குடிமகனாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை மிக எளிமையாகக் கற்றுக் கொடுக்க முடியும். இத்தகைய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த அவர்கள் ஒன்றாக இணைந்து தெளிவான முடிவுகளை எடுத்து, தன்னை சுற்றியுள்ள சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .

Objective: 

பள்ளி வளாகத்திற்குள் சந்திக்கும் 5 பிரச்சனைகளை மாணவர்களால் அடையாளம் காண முடியும் மற்றும் இந்த பிரச்னைகளுக்குத் தீர்வுகளை யோசிக்க முடியும்.

Steps: 

வழிமுறை 1:

வகுப்பை குழுக்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு குழுவிற்கும் அவர்கள் பள்ளியில் சந்திக்கும் பிரச்னையை அளியுங்கள்:

a.    பள்ளி பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறுவதற்கு, குழந்தைகள் முண்டியடித்துக் கொண்டு வருகிறார்கள்.

b.    பள்ளி உணவில் போதுமான ஊட்டச்சத்து இல்லை

c.    கழிவறைகள் சுத்தமாக இல்லை

d.    சிறு குழந்தைகள் கனமான பைகளை சுமக்கிறார்கள்

e.    மாற்றுத் திறனுள்ள ஒரு குழந்தை பேருந்தின் படிகளில் இறங்க சிரமப்படுகிறது

ஆசிரியருக்கான குறிப்புகள்: ஒவ்வொரு பள்ளிக்கும் இந்த சூழ்நிலை மாறுபட்டிருக்கும், பள்ளியின் சில துல்லியமான பிரச்சனைகளுக்கேற்ப சூழ்நிலைகளை மாற்றிக் கொள்ளலாம்.

வழிமுறை 2:

ஒவ்வொரு குழுவிடமும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரச்சனைக்கு சரியான தீர்வை அளிக்குமாறு கூறுங்கள்.

வழிமுறை 3:

ஒவ்வொரு குழுவையும் அந்த சூழ்நிலையை நடித்துக் காட்ட சொல்லுங்கள்.

ஒருவர் அதற்கு தீர்வளிக்க முன்வரலாம்.

வழிமுறை 4:

ஒவ்வொரு குழுவிடமும் அவர்கள் ஏன் இதனை மிகவும் உகந்த தீர்வாக நினைக்கின்றனர் என்று கேளுங்கள். ஏன் மற்ற தீர்வுகள் உகந்ததாக இருக்காது என்று விவரிக்குமாறு அவர்களிடம் கேளுங்கள்.

வழிமுறை 5:

பள்ளியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த தீர்வுகளைத் தெரிவித்து, கலந்துரையாடுவதில் திடமான வழிமுறைகளை மேற்கொண்டு, அவர்களின் பள்ளி வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துமாறு கூறுங்கள்.

Assessment: 

தொடர்ச்சியான மற்றும் முழுமையான மதிப்பீடு பின்வரும் செயல்பாடுகளின் மூலம் நடைபெறும்:

·  பள்ளியில் பிரச்னையை அடையாளம் காண்பது

·  தீர்வுகளை அடையாளம் காண்பது

·  நாடகத்தின் மூலம் பிரச்னையை நடித்துக் காட்டுவது

·  சரியான தீர்வுகளையும், சரிபட்டுவராத தீர்வுகளையும் வேறுபடுத்தி பார்த்து, அவர்களின் விருப்பத்தை நியாயப்படுத்துவது

·  மாற்றத்தை ஏற்படுத்த திடமான வழிமுறைகளை மேற்கொள்வது

Personal Reflection: 

இந்த பாடம் முழுவதும் மாணவர்களால் பிரச்சனையைத் தீர்க்கும் உத்திகளையும் அவர்கள் வளர்த்துக் கொண்ட திறன்களையும் பற்றி சிந்திக்க முடியும். அது மட்டுமல்லாமல், இந்த உத்திகளையும் திறன்களையும் பயன்படுத்தப்படக்கூடிய மற்ற சூழ்நிலைகளையும் அடையாளம் காண முடியும்.

19427 registered users
7743 resources