கதைகளின் மூலம் அறிவியலை அறிதல்

Resource Info

Basic Information

குழந்தைகள் கதைகள் கேட்க மிகவும் பிரியப்படுவார்கள். பள்ளிகளில், குழந்தைகளின் மொழி அறிவை மேம்ம்படுத்துவதற்கும், நீதியைப் புகட்டுவதற்கும், கதைகள் சொல்லப்படுகின்றன. ஆகையால், கதைகள் மொழி மற்றும் நீதிபோதனை அறிவியல் வகுப்புகளில் மட்டும் சொல்லப்ப்டுகின்றன. ஆனால், விஞ்ஞானப் பாடத்தை கற்பிப்பதற்குக் கதைகள் சொல்லும் பாணி பயன்படுமா என்பதைப் பற்றி நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்தது உண்டா ?  இந்தக் கட்டுரையில் கதைகள் சொல்லுவதன் மூலம் விஞ்ஞானத்தை மனத்தை ஈர்க்கும்படிக் கற்பிப்பதும் - கற்பதும்  எவ்வாறு செய்யமுடியும் என்பது விவரிக்கப்பட்டுள்ளது.   

Lesson plan Details

Duration: 
(All day)
முன்னுரை: 

சின்னக் குழந்தைகளுக்கு நிழல்களைப் பற்றிய பாடங்கள் அவர்களைச் சிந்திக்கத் தூண்டும் தலைப்புகளாகும்.

எப்படி, ஏன் நிழல்கள் உருவாகின்றன ?  நிழல்களின் உருவ அளவுகளும், அமைப்புகளும் மாறுபடுமா ?  நமது தினசரி சக்தியைப் பெற நிழல்கள் எப்படி நமக்கு உதவுகின்றன ?   - இப்படிப் பட்ட கேள்விகளுக்கு விடைகளைப் பெற இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள கதைகள், பயிற்சிகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் அவர்களுக்கு நீங்கள் உதவலாம்.

Objective: 

சின்னக் குழந்தைகளுக்கு நிழல்களைப் பற்றிய பாடங்கள் அவர்களைச் சிந்திக்கத் தூண்டும் தலைப்புகளாகும்.

  • எப்படி, ஏன் நிழல்கள் உருவாகின்றன ?  
  • நிழல்களின் உருவ அளவுகளும், அமைப்புகளும் மாறுபடுமா ?  
  • நமது தினசரி சக்தியைப் பெற நிழல்கள் எப்படி நமக்கு உதவுகின்றன ?   
  • இப்படிப் பட்ட கேள்விகளுக்கு விடைகளைப் பெற இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள கதைகள், பயிற்சிகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் அவர்களுக்கு நீங்கள் உதவலாம்.
Steps: 

கதைகளின் மூலம் அறிவியலை அறிதல்

ஒரு நல்ல கதையைப் போல் குழந்தையின் மனதைக் கவருவது வேறு ஒன்றும் கிடையாது. திறமையாக அமைக்கப்பட்ட ஒரு கதை குழந்தையின் கற்பனையையும், ஆராயும் திறனையும் வளர்ப்பதற்கு சிறந்த தூண்டுகோலாக அமைகிறது. இந்தக் கட்டுரை அறிவியலைக் கற்பிக்க கதைகளை ஒரு கருவிகளாகப் பயன்படுத்தும் சாத்தியக் கூறுகளை விளக்குகிறது.

கழுதையின் காப்பர் என்ற ஒரு கதையை இதற்கு ஆரம்பமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கதையை நீங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வர்ணனையைப் பயன்படுத்தி வகுப்பில் விவரிக்க வேண்டும். நிழல் பாடத்திற்கு இந்தக் கதை ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும்.

 

 

கழுதையின் காப்பர்

அது ஒரு மிகவும் உஷ்ணமான வெய்யில் நாள். கடந்த ஒரு வாமாக கழுதைக்கு ஓய்வே இல்லை. கழுதையின் எஜமான் மிகவும் கொடூரமானவன். அவன் கழுதைக்கு சிறிதளவே உணவும், தண்ணீரும் கொடுப்பான். ஆனால், நாள் முழுதும் அதனிடம் அதிகமாக வேலை வாங்கி, நன்கு அடிக்கவும் செய்வான். பக்கத்துக் கிராமத்திற்கு கரடுமுரடான பாதையில் கிராம மக்களையும் அவர்களது மூட்டைகளையும் சுமந்து கொண்டு செல்வது தான் கழுதையின் வேலை. ஒரு வெப்பமான நாளில் ஒரு பருத்த ஆசாமியையும், அவனது இரண்டு பெரிய பைகளைகளையும் அந்தக் கழுதை சுமக்க வேண்டி வந்தது.

மதியத்தில், கழுதை மிகவும் களைத்துப் போய், சிறிய ஓய்விற்காக நின்றது. அந்த இட்த்தில் எந்த நிழலும் இல்லாத்தால், அந்தப் பயணி கழுதையில் நிழலில் இளைப்பாறினான். கழுதையின் எஜமானும் அந்தக் கழுதையில் நிழலில் உட்கார விரும்பினான். ஆகையால், எஜமானன் அந்தப் பயணியிடம் சொன்னான் - “  கழுதை எனக்குச் சொந்தம். ஆகையால் அதன் நிழலும் எனக்கே சொந்தம். பக்கத்து ஊருக்கு என் கழுதை உன்னைச் சுமந்து செல்வதற்கு மட்டும் தான் நீங்கள் வாடகைப் பணம் கொடுத்துள்ளீர்கள். ஆகையால் நான் தான் அதன் நிழலில் உட்கார வேண்டும்.“ இதைக் கேட்டவுடன், பயணி கோபமாகப் பதில் சொன்னான் - “   கழுதையின் சேவைக்கு நான் பணம் கொடுத்திருக்கிறேன். கழுதையின் நிழலைக் கழுதையிலிருந்து பிரிக்க முடியாததால், அதன் நிழலைப் பயன்படுத்துவதற்கு எனக்கு உரிமை உண்டு.”

இரண்டு பேர்களும் கழுதையின் நிழலுக்குச் சண்டைபோட்டுக் கொண்டிருக்கும் போது, கழுதை அந்தக் குண்டு பயணியிடமிருந்தும், கொடூரமான தன் எஜமானிடமிருந்து தப்பி ஓடிவிட்டது.

 

நிழல் எப்படி விழுகிறது ?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது இளம் வயதுக் குழந்தைகளுக்கு கடினமானதாக இருக்கும். அந்த மாதிரியான சம்யங்களில், நீங்கள் குழந்தைகளிடம் இப்படிக் கேட்கலாம் - இருட்டாக இருக்கும் வகுப்பறையில் உங்களால் நிழலைப் பார்க்க முடியுமா ?  பிறகு, வகுப்பறைக்கு வெளியே சூரிய ஒளியில் அவர்களை நிற்கச் சொல்லவும். அவர்களால் தங்களது நிழல்களை இப்பொழுது காணமுடிகிறதா ?  நிழல் வருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?  அதற்கு ஒரு வஸ்துவும், வெளிச்சமும் வேண்டும். சூரியன், சந்திரன் அல்லது வெளிச்சத்தை வெளியிடும் பொருள் ஆகியவைகள் வேண்டும். வெளிச்சத்தின் பாதையை  ஒரு பொருள் இடையில் தடுக்கும் போது, நிழல் உருவாகிறது. குழந்தைகள் ஒரு பொருளாக இருந்து, சூரிய ஒளியின் பாதையைத் தடுப்பதால், சூரிய ஒளி பாதிக்கப்படும் அந்த இட்த்தில் ஒரு நிழல் வடிவம் உருவாகிறது என்பதை குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.

நிழல் ஒரே இட்த்தில் நாள் பூராவும் விழுகிறதா அல்லது நிழலின் பாதை மாறுபடுகிறதா ?  முதலில், குழந்தைகளே இதற்கான பதிலை யோசித்துப் பார்க்க நீங்கள் அனுமதிக்கவும். பிறகு, அந்த நாளில் வேறு நேரங்களில் சூரிய ஒளி நன்கு படும் இட்த்தில் அவர்களை நிற்கச் செய்யவும். நிழலின் தோற்றம், அளவு ஆகியவைகளை குறிப்பதற்கு அவர்களுக்கு ஒரு அட்டையைக் கொடுக்கவும்.

 

நேரம்

நிழல் (அளவு & தோற்றம் )

10.00

 

12.00

 

14.00

 

 

ஒரு நாளில் மாறுபட்ட நேரங்களில் நிழல்கள் ஏன் பலவிதமான அளவுகளில் இருக்கின்றன என்பதைப் பற்றிக் குழந்தைகளை ஆராயச் சொல்லவ்து ஒரு மனத்துக்கு இனிய பயிற்சியாக அமையும். இந்தப் பயிற்சியில், இரண்டு வகையான காரணங்களான - அந்த நாளின் நேரம், வருட்த்தின் நேரம் ஆகியவைகளால் நிழல்களின் தன்மைகள் பாதிக்கப்படும் என்பதை குழந்தைகளுக்கு மறக்காமல் தெரிவிக்க வேண்டும்.

சூரியன் காலையில் ஆகாயத்தில் கீழே இருக்கும் போது - அதாவது காலைச் சூரிய கதிர்களில், நிழல்கள் நீண்டு இருக்கும். சூரியன் ஆகாயத்தில் உச்சியில் மத்தியானத்தில் இருக்கும் போது, நிழல் சின்னதாக இருக்கும். மேலும், கோடை காலத்தைக் காட்டிலும், குளிர் காலத்தில் நிழல்கள் நீண்டு இருக்கும்.

ஒரு பொருளின் நிழல் விழுவது ஒளிவிடும் பொருளின் இட்த்தைப் பொருத்தா அல்லது நாளின் நேரத்தைப் பொருத்தா அமைகிறது ?  கீழே ஒரு முழுமையற்ற விளக்கப் படம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்த்தில் நிழல் எங்கு விழும் என்பதை யோசித்து முடிவு செய்து, அந்த இடத்தை வரைந்து பட்த்தைப் பூர்த்தி செய்யும் படிக் குழந்தைகளிடம் சொல்லவும்.  

 

நிழல்களைப் பற்றி ஒரு சிறிய தொகுப்புக் கட்டுரையை குழந்தைகளை எழுதச் சொல்லி இந்தப் பயிற்சியை நீங்கள் பூர்த்தி செய்யவும். என்னுடைய விருப்பமான நிழல் என்ற தலைப்பில் ஒரு சிறுகதையோ அல்லது ஒரு கவிதையையோ குழந்தைகளை எழுதச் சொல்ல்லாம். இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு உதவியாக, குழந்தைகளுக்கு நிழல்களைப் பற்றி எழுதுவதற்கு அவசியமான வார்த்தகளின் பட்டியலை அவர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

சூரியன்

நாள்

ஒளி

மதியம்

விளக்கு

மங்கலான வெளிச்சம்

பிரகாசம்

பொம்மை

இருள்

 

எலிகள்

 

ஜன்னல்

 

 

 

 

 

 

 

 

கைகளை வைத்து நிழல் உருவங்களை சுவர்களில் உருவாக்கும் விளையாட்டுப் பயிற்சியைக்  குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். இடது பக்கத்தில் சில உருவங்கள் நீங்கள் உருவாக்குவதற்கு உதவிகரமாக கொடுக்கப்பட்டுள்ளன. 

 

 

 

 

 

 

புத்திசாலி உருளைக்கிழங்கு

ரிங்கி காய்கறிகளை வெறுத்தாள். அவளது தாய் காய்கறிகளைச் சாப்பிடும் படி ரிங்கியை தன்னால் முடிந்த மட்டும் முயன்று பார்த்தாள். ஆனால், ரிங்கியோ ஒரே அடியாக காய்கறிகளை “சாப்பிட மாட்டேன்” என்று ஒதிக்கி விட்டாள். 

ஒரு நாள் ரிங்கியின் தாய் வெள்ளரிக்காய் அல்வா செய்தாள். அது மிகவும் ருசியாக அமைந்து விட்ட்து. ரிங்கியின் இளைய சகோதரி நீலு அந்த அல்வாவை மிகவும் ஆர்வமாக ஒவ்வொரு துண்டையும் ருசித்துச் சாப்பிட்டாள். அவளது தந்தையும் அல்வாவின் ருசியை மிகவும் புகழ்ந்து பேசினார். ஆனால், ரிங்கியோ தன் மூக்கைப் பிடித்துக் கொண்டே தன் வெறுப்பைக் காட்டினாள். அவளது செய்கையைப்பார்த்து, அவளது தாய் மனம் வருந்தினாள். ஆனால், அவளது தாயை விட மிகவும் மனம் வருந்தியது வெள்ளரிக்காயாகும். இதை ஒரு மூலையில் இருந்த உருளைக்கிழங்கு கவனித்தது.

“   ஏ, வெள்ளரிக்காயே!  நீ ஏன் சோகமாக இருக்கிறாய் ?  ” என்று உருளைக்கிழங்கு கேட்டது. “ ரிங்கி எனக்கு எந்தவித வாய்ப்பும் கொடுக்காமலே மீண்டும் என்னை நிராகரித்து விட்டாள்   ’ என்று வெள்ளரிக்காய் அழுதது.

“  அன்றொரு நாள் என்னையும் மேஜைக்கு அப்பால் அவள் தூக்கி வீசி எறிந்து விட்டாள், தெரியுமா? இந்தக் கர்வம் கொண்ட சிறுமிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்” என்று பூ முட்டைகோஸ் ( cauliflower) கோபமாகச் சொன்னது.  அதைக் கேட்ட உருளைக்கிழங்கு சிரித்துக் கொண்டே சொன்னது- “இருக்கட்டும், எனக்கு ஒரு யுக்தி தோன்றி உள்ளது.”

அடுத்த நாள் காலைச் சிற்றுண்டிக்கு ரிங்கி மேஜைக்கு வந்த பொழுது, பால் டம்பளர் அவளது வருகைக்குக் காத்திருந்தது. அவளது பால் மிகவும் கசப்பாக இருப்பதை உணர்ந்து அவள் அதிசயமானாள். பாவற்காயை அதன் சாறைச் சிறிது பிழிந்து பாலில் விடும்படி உருளைக்கிழங்குதான் சொல்லியது. பள்ளி செல்வதற்கு நேரமாகி விட்டபடியால், ரிங்கியால் அதைப் பற்றி ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் தனது மதிய உணவு வைத்துள்ள டப்பாவை வேகமாக எடுத்துக்கொண்டு, பஸ்ஸை நோக்கிச்  சென்று விட்டாள்.

மதிய சாப்பாட்டு நேரத்தில், தோசையைச் சாப்பிட வெகு ஆவலாக டப்பாயைத் திறந்தாள். ஆனால், தோசையில் உப்பு அதிகமாக இருந்ததால், அவளால் சாப்பிட முடியவில்லை. தோசை மாவில், உருளைக்கிழங்கு தான் ஒரு முழு கிளாஸ் உப்பைப் போட்டு விட்ட்து. மாலையில் ரிங்கி வீட்டிற்கு வந்த போது, அவளால் ஒன்றுமே பேச முடியாத அளவுக்கு அதிகப் பசியோடு இருந்தாள். குளிர்சாதன்ப் பெட்டியின் உறைப் பகுதியில் (freezer) வைக்கப்பட்டுள்ள ஐஸ் கிரீமை அவள் நேரே சென்று எடுத்தாள். ஐஸ் கிரீம் புளிப்பாக இருப்பதைக் கண்டு, அவள் வெறுப்படைந்தாள். எலுமிஞ்சம் பழச் சாற்றை உருளைக்கிழங்குதான் ஐஸ் கிரீமில் பிழிந்து விட்டிருக்கிறது. அவளுக்குக் கோபம் வந்த்து. அதே சமயத்தில் பசியையும் அவளால் பொறுக்க முடியவில்லை. ஆகையால், குளிர்சாதன்ப் பெட்டியில் உள்ள அடுத்த பதார்த்தை ரிங்கி கைப்பற்றினாள். அது வெள்ளரிக்காய் அல்வா.  “கடவுளே, என்னைக் காப்பாற்று. இவ்வளவு ருசியாக வெள்ளரி அல்வா இருக்கும் என்று ஏன் நான் உணராமல் போய்விட்டேன் ?” என்று சிறிது நேரத்திற்குப் பிறகு உணர்ச்சி வசப்பட்டு உரக்கச் சொன்னாள். அவளே அல்வா முழுவதையும் உடனே சாப்பிட்டுவிட்டாள். அதன் பிறகு, ரிங்கி புதியவளாக உருமாறி விட்டாள். ஆமாம், அவள் அதன் பிறகு ஒரு போதும் எந்தக் காய்கறிகாயையும் வேண்டாம் என்று சொன்னதில்லை.

 

 

 

சிறு குழந்தைகளுக்கு காய்கறிகள் மிகவும் விரும்பமானவைகளாக இருப்பதைல்லை என்பது என்னவோ உண்மையாகும். ஆனால், காய்கறிகள் நமது உண்ணும் உணவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடம்பை ஆரோக்கியமாக வைப்பதற்கு அவசியமான புரோட்டீன்கள், வைட்டமின்கள், கார்போ ஹைட்ரேட், கொழுப்புத் சத்துக்கள் ஆகியவைகளை காய்கறிகள் தான் அளிக்கின்றன. காய்கறிகள் பல்வேறு செடிகளின் பாகங்களிலிருந்து கிடைக்கின்றன.

பரிச்சயமான சில காய்கறிகாய்களின் பெயர்களை குழந்தைகள் குறிப்பிடும்படிச் சொல்லவும்.  காய்கறிகளை அந்தந்தச் செடிகளின் பாகங்களின் தொடர்பு மூலம் வகைப்படுத்திப் பயிற்சியைச் செய்வது சாலச் சிறந்ததாகும்.

 

செடியின் பாகங்கள்

காய்கறிகள்

பூ

பூ முட்டை கோஸ் (Cauliflower)

இலைகள்

பச்சை கீரை (Spinach)

தண்டு

வாழைத் தண்டு

வேர்

முள்ளங்கி (Radish)

பழம்

தக்காளி - வெள்ளரி

விதை

பட்டாணி

குமிழ் வடிவான விதைப் பூண்டு

வெங்காயம்

 

காய்கறிகள் நமக்கு எங்கிருந்து கிடைக்கின்றன ?  “சந்தையிலிருந்து” என்ற பதில் தான் எதிர்ப்பார்க்க்க் கூடியதாகும். காய்கறிகள் பயிர்செய்யும் விவசாயி காய்கறிகள் புதிதாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு என்ன செய்கிறான் என்பதைப் பற்றி குழந்தைகள் ஊகிக்க முடியுமா ?  இந்த்த் தருணத்தில், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளால் ஏற்படும் அபாயமான விளைகளைப் பற்றிக் குழந்தைகளுக்குச் சுட்டிக் காட்டுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். காய்கறிகளின் நல்ல விளைச்சலுக்கு ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் அவசியமானதாக இருப்பினும், அவைகள் நமக்கு தீங்கையும் விளைவிக்கின்றன. காய்கறிகளைச் சாப்பிடுவதற்கு முன்பு, அவைகளை நன்கு நீரில் கழுவ வேண்டியதின் அவசியத்தைப் பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும்.

அனைத்துக் கறிகாய்களும் வருடம் பூராவும் கிடைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டும் கிடைக்கும் காய்கறிகளின் பட்டியலைக் குழந்தைகளைத் தயார் செய்யச் சொல்லவும்.  

 

காய்கறி

பருவ காலம்

பச்சைப் பட்டாணி

கோடை காலம்

 

காய்கறிகளின் நல்ல விளைச்சலுக்குத் தேவையானவைகள் என்ன ?  போதுமான வெளிச்சம், நல்ல மண், நீர் ஆகியவைகள். உங்கள் பள்ளியில் ஒரு சிறிய தோட்டம் போடுவதற்குப் போதுமான சிறிய அளவு இடம் இருந்தால், அதில் காய்கறி விதைகளைக் குழந்தைகள் விதைக்கச் செய்யவும். வாராவாரம் அந்த காய்கறிச் செடிகளைப் பராமரிக்க அவர்களை அனுமதிக்கவும். ஒரு தோட்டம் போடுவதற்கான இடம் இல்லாவிடில், பெரிய தொட்டிகளில் காய்கறிகளை வளர்க்கலாம். ஒவ்வொரு வாரமும், செடிகளின் வளர்ச்சியை அளந்து, அவைகளைக் குறிக்கச் சொல்லவும். ஒரு சில வாரங்களுக்குள்ளேயே, குழந்தைகள் அந்த காய்கறிகளுக்குச் சொந்தக் காரர்களாகி விடுவார்கள்.

கதைகளைப் போல், கவிதைகளையும் அறிவியலை ஆராய ஒரு தூண்டுகோலாகப் பயன்படுத்தலாம். உதாரணமாக, கடற்கரையைப் பற்றிய கவிதைகள் குழந்தைகளை கடலுக்குப் பக்கத்தில் காணப்படும் பலவிதமான பொருடகளான மணல், கிளிஞ்சல்கள், உப்பு நீர் ஆகியவைகளைப் பற்றி ஆராயும் நிலைக்கு உட்படுத்தும். அதிகமான நேரத்திற்கு குழந்தைகளின் ஆர்வம் குறையாமல் இருக்க கதைகள் அல்லது கவிதைகளைப் பயன்படுத்துவது ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கிறது.

இந்தக் கட்டுரை முதலில் டீச்சர் பிளஸ், இதழ் 52- ஜனவரி-பிப்ரவரி 1998 அன்று வெளியிடப்பட்டு, அது சில மாறுதல்களுடன் இங்கே தழுவி எழுதப்பட்டுள்ளது.

 

18788 registered users
7333 resources