வகுப்பு 1-2

 

 

 

 

 

 

16-வது பெருக்கல் வாய்ப்பாடு - இந்த வாய்ப்பாட்டை கற்பதற்கு இந்த வீடியோ-ஆடியோ மிகவும் பலன் உள்ளதாக இருக்கும். 

ஆக்கம்: 

திரு. கு. சீனுவாசன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாலை அகரம், கோலியனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.

சாதாரணப் பள்ளிகளும், விசேஷமான கவனிப்புகள் தேவைப்படும் குழந்தைகளுக்கான பள்ளிகளும் இருப்பதை நாம் அனைவரும் அறிந்தது தான். சிறப்புக் கவனம் தேவைபடும் குழந்தைகள் அவர்களுக்காக அமைந்த பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், இன்றைய கால கட்டத்தில், மற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் சேர்ந்து படித்தால் அதில் அவர்கள் அடையும் பலன் அதிகம் என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆகையால், இப்படிப் பட்ட சிறப்புக் குழந்தைகளை 40 அல்லது 50 சாதாரண குழந்தகளுடன் ஒரு ஆசிரியர் எப்படி சமாளிப்பார்?

பலவகையான எண்களைப் பற்றிய கருத்துகளை கற்க உருவாக்கப்பட்டு வகுப்புகளில் மிகவும் வெற்றிகரமாகப் பயன்படுத்தபட்ட பாடங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் எப்போதும் கற்பிக்கும் பயிற்சிகளை எளிமையாக உருவாக்க இந்தப் பாடங்கள் உதவிகரமாக இருப்பதை உணருவார்கள். ஏனென்றால், இந்த பயிற்சிகளுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் எளிதில் கிடைப்பனவாகவும், அதை நிர்வகிப்பதும் எளிதாகவும் இருக்கும்.

”ஒரு மனிதனுக்கு உடல் நலம் அல்லது ஆரோக்கியம் இல்லையெனில், வேறு எது இருந்தும் பயன் என்ன ?” 
இக்கருத்தை ஒத்துக்கொள்ளாதவர்கள் எவரேனும் இருப்பார்களா ?
இதை மறுப்பேதுமின்றி ஒப்புக்கொள்ளும் நாம், நமது உடலைப்பற்றி எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள இந்த பரிசோதனை !

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

எல்லா மனிதர்களும் நேர்மையானவர்கள் இல்லை, எல்லா மனிதர்களும் உண்மையானவர்களும் இல்லை என்பதை எனது மகன் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் தான். ஆனால், ஒவ்வொரு போக்கிரிக்கும், அதைச் சமன் செய்ய ஒரு தலைவனும் இருப்பான் என்பதையும் அவனுக்குக் கற்றுக்கொடுக்கவும்.

அதே போல் ஒவ்வொரு தன்னலமுள்ள அரசியல்வாதி இருக்கும் போது, தியாக சீலமுள்ள ஒரு தலைவனும் இருப்பான் என்பதையும், ஒவ்வொரு விரோதி இருக்கும் போது, ஒரு நண்பனும் உண்டு என்பதையும் அவனுக்குக் கற்றுக் கொடுக்கவும்.

முழுக்களின் பெருக்கல் அடிப்படை விதியினை விளையாட்டுப் போல் கற்பிக்கும் ஒரு பயிற்சியாக இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.

1-லிருந்து 6 எண்கள்களில் உள்ள மிகை மற்றும் குறை எண்களை வைத்து இந்தப் பயிற்சி உருவாகப் பட்டுள்ளது. அதை விளக்குவதற்கு எண் கோடு பயன்படுத்தப் படுகிறது. 

மிகை எண்களை குறை எண்கலால் பெருக்கும் போது  விடை எண் குறை எண்ணாக இருப்பது இதில் விளக்கப்பட்டுள்ளது. 

அதே போல் குறை எண்களை குறை எண்களால் பெருக்கும் போது வரும் விடை எண் மிகை எண்ணாக இருக்கும் என்பதையும் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த வீடியோ காட்சிப் படத்தை அனுப்பி உதவியவர்:

தேவையான பொருள்: ஒரு A-4 காகிதம் - ஒரு பக்கம் கருப்பு, மறுபக்கம் வெள்ளை நிறமுள்ள காகிதம்.

ஒரு செவ்வக வடிவ பெட்டியை பசை இன்றியும், கத்திரிக்கோலால் வெட்டாமலும், செய்வது தான் இதன் சிறப்பு அம்சமாகும். 

இந்த நீளமான பெட்டியில் பென்சில்கள், பேனாக்கள், மார்க்கர்கள் போன்றவைகளை வைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். 

வீடியோ படத்தில் விளக்கியபடி, பேப்பரை மடித்தும், சொருகியும் செய்து, செவ்வப் பெட்டியைச் செய்யவும். 

தேவைப்படும் பொருட்கள்:

 1. மெல்லிய ஸ்ட்ரா
 2. தடிமனான ஸ்ட்ரா
 3. ஒட்டும் டேப்
 4. கத்தரிக்கோல்

வீடியோ காட்சியில் விளக்கப்பட்டிருப்பது போல் இரண்டு ஸ்ட்ராக்களையும் ஒன்றோடொன்று இணைத்து, மெல்லிய ஸ்ட்ராவின் ஒரு பக்கத்தின் முனையை ஒரு விரலால் மூடி, மறு முனையிலிருநது வாயினால் காற்றை ஊதினால், தடிமனான ஸ்ட்ரா காற்றாடி போல் வேகமாகச் சுற்றும்.

இது நியூட்டன் மூன்றாம் விதியான - ஒவ்வொரு விசைக்கும் அதே அளவு எதிர்விசை உண்டு - என்பதை இந்த விளையாட்டுப் பரிசோதனை விளக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:

 1. காலி டூத் பேஸ்ட் டியூப்
 2. ஸ்ட்ரா
 3. செல்லோ டேப்
 4. கத்திரிக்கோல்

வீடியோ படத்தில் விளக்கியபடி டூத் பேஸ்ட்டை வெட்டியும், மையத்தில் துளை போட்டும் ஸ்ட்ராவை இதில் சொல்லியபடி செய்தும் டியூப் சுழல் விசிறியை உருவாக்க வேண்டும். 

ஸ்ட்ரா மூலம் காற்றை வாயினால் ஊதினால், முன்னியக்கி (Propeller) போல் இந்தக் கருவை விசிறி போல் சுழலும் விந்தையைக் காண்பீர்கள். 

தேவைப்படும் பொருட்கள்:

 1. பல வர்ண சிறிய சதுரக் கண்ணாடித் தாள்கள்
 2. செவ்வக வடிவ காகித அட்டையின் மையப் பகுதியில் மூன்று வட்ட வடிவ துவாரங்கள் போட்ட காகித அட்டை.
 3. வட்ட வடிவ காகித அட்டையைச் சுற்றி வட்ட வடிவ துவாரங்கள் போட்ட இரண்டு அட்டைகள்.
 4. பசை

வீடியோவில் இரண்டு தனித்தனியான செயல்முறைகள் விளக்கப்பட்டுள்ளன.

முதலில் மூன்று வட்ட வடிவ துவாரங்கள் உள்ள செவ்வக அட்டையில் ஒட்டப்ப்ட்ட மூன்று விதமான வரணக் காகிதங்களை ஒன்றோடொன்று இணைக்கும் போது, அந்தக் கண்ணாடிக் காகிதத்தின் நிறம் மாறுவதைக் காண்பதற்கு ஆச்சரியமாக இருக்கும்.

பக்கங்கள்

18809 registered users
7333 resources