திசைமானி-பாதை-்3, பயணம்-4
அஞ்சல்காரர் வழியே கடிதங்களைப் பெறுவது என்பது ஒரு பழங்கதையாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்க, ’உன் அஞ்சல் பெட்டியில் என்ன’ என்ற பாடத்திட்டத்தின் மூலம் பல புதுமையான முயற்சிகளை விளக்குகின்றார் ஓர் ஆசிரியர். இந்தியாவில் பெண் கல்விக்கு வித்திட்ட முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே அவர்களின் புத்தகத்தைப் படித்து அதிலிருந்து கிடைத்த அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார் மற்றொரு ஆசிரியர். ’பண விளையாட்டு’ என்ற செயல்பாட்டின் மூலம் இடமதிப்பு என்னும் கருப்பொருளை எளிமையாக மாணவர்களிடம் எடுத்துச் செல்லலாம் என்று ஒரு பாடத்திட்டம் கூறுகிறது. இவைமட்டுமின்றி, மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும் மகிழ்ச்சியான வாசித்தல் நிகழவும் வகுப்பறையில் ’வாசகர் அரங்கத்தை’ எவ்வாறு செயல்படுத்தலாம் என்ற கற்பித்தல் நுணுக்கங்களும் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன.
இது "திசைமானி"(பாதை-3, பயணம்-4) என்ற ஆசிரியர்களுக்கான இருமாத இதழ்.