வகுப்பறையில் தொழில்நுட்பம்

By editor_ta | அக் 29, 2014

நான் சில பள்ளிகளில், ஆர்வம் மிகுந்த ஆசிரியர்கள் தனது அலைப்பேசியிலுள்ள வசதிகளை, குழந்தைகளுக்கு பாடல்கள் மூலம் கற்றுத் தருகிறார்கள், அலைப்பேசியிலுள்ள தகவல்களை கணினிக்கு மாற்றி அதன் மூலமும் கற்றுத் தருகின்றனர். எ.கா:- தனது பள்ளியில் நாட்டுப்பண்-ஐ ஒரே ராகத்தில் அனைத்துக் குழந்தைகளும் பாடுவதற்காக bluetooth தொழில்நுட்பத்தை பயன் படுத்தினார். கோணங்கள் கற்றுத்தருவதற்காக, தனது அலைபேசியிலுள்ள camera வை பயன்படுத்தி, விதவிதமான விரிசல்கள்(சவுறு/தரை), கடிகாரமுட்கள், திறந்த கதவு முதலிய எக்கச்சக்கமான அன்றாட வாழ்வில் கோணங்களை படம் பிடித்து, அதனை dongle/USB cable மூலம் கணினியில் பதிவேற்றம் செய்து, அதனை projector பயன்படுத்தி குழந்தைகளுக்கு கற்க வாய்ப்பு ஏற்படுத்தினார். இவ்வாறு தங்களது அனுபவத்தை இங்கு பதிவு செய்யலாமே!

19288 registered users
7708 resources