பூஜ்யத்தின் வரலாறு

By Sridhar | செப் 3, 2013

S.ஸ்ரீதர், ஆசிரியர் பயிற்றுனர், காட்பாடி
பூஜ்யத்தின் வரலாறு
இன்று நீங்கள் கணினிகளில் இந்த அளவிற்கு புகுந்து விளையாட காரணமாக இருப்பது அன்று யாரோ பெயர் தெரியாத ஒரு இந்தியர் கண்டு பிடித்த பூஜ்யம் தான் காரணம். ஆம் கணினி இயங்குவதற்கு காரணமாக இருப்பது பைனரி எண்கள் என அழைக்கப்படும் 0 மற்றும் 1 ஆகும்.
சரி அந்த 0 பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டாமா? இதோ அதன் வரலாறு.
இதிகாசங்களில் வெறுமை (அ) ஒன்றுமில்லை (அ) வெற்றிடம் என்பதை குறிக்க “சூன்யம்” என்ற சொல் பயன்படத்தப்பட்டது. “சூன்யம்” என்றால் சமஸ்கிருத்தில் ஒன்றுமில்லை என்று பொருள். அதையே பின்னர் ”சுன்னம்“ என்ற சொல்லாக பயன்படுத்தினர்.
இதையே இந்திய கணித மேதைகள் கணிதவியலில் மதிப்பில்லாதவைகளுக்கு வெற்றிடத்தை பயன்படத்தினர். பின்னர் புள்ளியை பயன்படுத்தினர். பின்னர் குழப்பத்தை தவிர்க்க புள்ளியைச் சுற்றி வட்டமிட்டனர். பின்னர் புள்ளியை தவிர்த்து வட்டத்தை (0) மட்டும் பயன்படுடத்தினர். இந்த குறியீட்டு முறை இந்தியாவிலிருந்து சீனா வழியாக பிற நாடுகளுக்கு பரவியது. அந்த வகையில் 0 யை கண்டு பிடித்து வழங்கிய பெருமை ஒரு இந்தியரையே சாரும்.
இந்த “சூன்யம்” என்ற சொல் வெவ்வேறு மொழிகளில் மாறி பிரஞ்சு மொழியில் ஜீரோ (Zero) என வழங்கப்பட்டு அதுவே நிலைத்து விட்டது.
மாணவா்களுக்கு இந்த பூஜ்யம் பற்றி கூற உங்கள் ஆலோசனை என்ன?

Pugazhendi's படம்

பூஜ்ஜியம் என்பதைத் தமிழில் சுழியம் என்று கூறுகின்றனர். அதையே பயன்படுத்தலாமே.

MURUGESAN's படம்

பூஜ்யம் என்பது பலவீனம் மட்டும் அல்லல பலமும் kooda

19288 registered users
7708 resources