பள்ளியும் சமுதாயமும்

By editor_ta | செப் 16, 2014

இப்போதுள்ள பள்ளிகளில், சமூகத்தின் பங்கு முக்கியமானதா? தேவையானதா? அவ்வாறெனில், பள்ளிச் செயல்பாடுகளில்,  சமுதாயத்தின் பங்கினை எந்தெந்த வழிகளில் அதிகரிக்கலாம்?

raa.damodaran's படம்

வணக்கம்.  இப்போதுள்ள பள்ளிகளில் சமுதாயத்தின் பங்கு முக்கியமானது மட்டுமல்லாது தேவையானதும்கூட. பள்ளிச் செயல்பாடுகள் என்பது வெறுமனே பள்ளியை நடத்துவது மட்டுமன்று. பள்ளி என்பது கற்பவர்கள், கற்பிப்பது என அமைகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்விக் கூடம் என்பது சாதிப் பிரச்னை மற்றும் ஒழுக்கப்பிரச்னைக்குரிய இடமாக மாறிவருகிறது என்பதைச் செய்தித்தாள்களில் அறிந்து வருகிறோம். இதற்குக் காரணம் சமுதாயம் பள்ளியைக் காண இயலாததுதான். எனவே என்ன செய்யலாம்? சமுதாயத்தின் பங்கு எந்தெந்த வழிகளில் அமையலாம்?1. மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் பள்ளிகளில் உள்ளதா? என உதவவேண்டும்.2.பள்ளிகளில் மத, இனக் கலவரங்களைத் தூண்டும் ஆசிரியர்கள், மாணவர்களை அழைத்து அறிவுரை பகிரவேண்டும்.3. மாணவர்களின் போதைப்பழக்கவழக்கங்களை வளர்க்கும் புறச்சூழல்களைத் தடுக்கவேண்டும்.4. ஏழ்மை மற்றும் வசதியின்மைக் குறைபாட்டை நீக்க சமுதாயமானது உதவ முன்வரவேண்டும்.5. கல்வி என்பதைக் கடந்து, மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த, அவர்களுக்குள் ஒளிந்திருக்கிற திறமைகளைக்கொணர சமுதாயம் கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பள்ளியுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்.5. பள்ளிச் செயல்பாடுகளில் ஏற்படும் தவறுகளுக்குத் தண்டனை அளிப்பது பதிலாக, குற்றம் இழைத்தவருக்கு ஆலோசனைதரும்  நல்ல குழு ஒன்றைச் சமுதாயம் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.6. பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளில் தொடர்ந்து அதிக மதிப்பெண் மாணவர்களை ஊக்குவிக்கப் பள்ளியுடன் இணைந்து பரிசளிக்கவேண்டும்.7. குறைதீர் கற்பிக்கத் தனியாக  ஓர் அறையை ஒதுக்கி, சமுதாயத்தின் நாட்டமுள்ள இளைஞர்களை ஆசிரியர்களுடன் இணைத்துக் கற்பிக்கவேண்டும்.8. சீர்கெடும் சமுதாயததின் காரணிகளை வளரும் பிள்ளைகளுக்கு நல்வாழ்வுகல்வி வழியாகப் புகட்டும் குழுவைச் சமுதாயத்ததைச் சேர்ந்தவர்கள் உருவாக்கி, பள்ளி இல்லாத நாளில் மாணவர்களுக்கு அச்சமுதாயமே வலியுறுத்தவேண்டும்.9.பள்ளிமாணவர்கள் மோசமான கலாச்சாரத்தில் சிக்கிச் சீரழியாவண்ணம், சமுதாயத்தில் மீட்புக்குழுவை உருவாக்கிப் பாதிக்கப்பட்ட மாணவர்களைக் காப்பாற்றவேண்டும்.10. மிகச்சிறந்த பள்ளி என்கிற இலக்கினை நோக்கிச் செல்ல, அற்புதமான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தும் குழுவைச் சமுதாயமானது ஆசிரியர்களின் துணையுடன் அமைத்துச் செயல்படுத்தவேண்டும். இப்படிக்கு.இரா.தாமோதரன், அ.மே.நி.பள்ளி, மெலட்டூர் 614301. தஞ்சை மாவட்டம், 9965851345

editor_ta's படம்

தாமோதரன் அவர்களே, தங்களது கருத்துகள் மிகவும் சிந்தனை மிக்கது. 

19288 registered users
7708 resources