நாட்குறிப்பு
By editor_ta | ஐன 30, 2014
பள்ளிகளில் குறிப்பாக அரசு சாரா தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் நாட்குறிப்பு என்று ஒன்று இருக்கும். அதிலும் தினசரி வீட்டுப்பாடங்களும், பழமொழிகளும்/நல்லொழுக்க சொற்றொடர்களும், பள்ளி நிகழ்வுகளுமே நிறைந்திருக்கும்.
நாட்குறிப்பு என்பது குழந்தைகளே அவர்களுக்கு பிடித்தது, பாதித்தது, எண்ணியது, நிறைவேறியது, நிறைவேறாத்து, தனது வெற்றி, நண்பர்கள், மகிழ்ச்சியான தருணங்கள், விளையாட்டுகள், பெற்றோர்கள், ஊர், தெரு, பறவைகள், பேருந்து பயணம் என தனக்குத் தோன்றிய விஷயங்களை வரையவோ/எழுதவோ, ஆசிரியர்களாகிய நாம் ஊக்கப்படுத்தலாமே! அது தனியார் பள்ளிகளுக்கென்றில்லை அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளையும் எழுதவோ/வரையவோ செய்யலாமே!
தாங்கள் இதனை தங்களது வகுப்பறையில் முயன்று அதன் விளைவுகளை பதிவு செய்யுங்களேன்!