சமூக அறிவியலைக் கற்றல்

By editor_ta | ஏப் 5, 2014

பள்ளியில் சமூக அறிவியலை எவ்வாறெல்லாம் கற்கலாம்? உதாரணமாக, எனது பள்ளி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள விழைகிறேன். எனது பள்ளி உயி்ர் நிலைப்பள்ளி. அதில் 600 க்கும் மேற்பட்ட மாணவமணிகள் இருந்தோம். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சிலர்(விருப்பபட்டோர்) தேரத்தல் வேட்பாளர்களாக நின்றனர். காலை நேர கூட்டத்தின் பொழுது ஒவ்வொருவரும் தனது வாக்குறுதிகளை மற்ற மாணவர்களிடம்(வாக்காளர்களிடம்) முன்வைப்பர். பின்பு, உணவு இடைவேளையின் போது ஒவ்வொரு வேட்பாளரும் தனது நணபர்களுடன் ஒவ்வொரு வகுப்பாக சென்று  பிரச்சாரம் செய்வர். மறுநாள் மதியம் வாக்காளர்கள் தத்தமது வகுப்பறையில் வாக்களிப்பர்.(சிறார்களை கைத்தூக்கி வாக்களிப்பர். பெரிய வகுப்பு குழந்தைகள் பெயரிடப்பட்ட ஓட்டுச் சீட்டில் தனது ஓட்டை பதிவு செய்வர்). இதற்காக ஆசிரியர்கள் காலையில் வாக்காளர்களுக்கு எவ்வாறு வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பதற்கு முன்பு என்னவெல்லாம் யோசிக்க வேண்டும் என்பதை குழந்தைகளிடம்(வாக்காளர்களிடம்) விளக்குவார். அன்று அனைவரும் பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும். 

பின்பு ஒவ்வொரு வகுப்பிலுள்ள ஓட்டு எண்ணிக்கையையும் சேர்த்து, யார் அதிக வாக்கு எண்ணிக்கையில் உள்ளாரோ அவர் பிரதமராகவும், மற்றவர்கள் பல்வேறு துறையின் மந்திரிகளாகவும் இருப்பர். மாதத்திற்கு ஒருமுறை உணவு இடைவேளைக்கு பின்பு பாராளிமன்றம் கூடும். அப்போது வாக்களர் தங்களது பிரச்சனையையோ கோரிக்கையையோ சம்மந்தப்பட்ட மந்திரியிடம் முன்வைப்பர். இதற்கிடையிலும் ஒவ்வொருநாளும் உணவு இடைவேளையின் போது ஒவ்வொரு மந்திரியும் சம்மந்தப்பட்ட/துறை சார்ந்த பொறுப்புகளை நிறவேற்றுவர். எடித்துக்காட்டாக, சுகாதார அமைச்சர் வகுப்பறையும், உணவு சாப்பிடும் இடங்களும், விலையாட்டு மைதானமும் சுத்தமாக வைத்திருக்குமாறு வாக்காளர்களிடம் கூறுவார். குப்பைத்தொட்டிகளை பயன்படுத்தக் கோரிக்கையிடுவார். அதற்காக ஒவ்வொருவகுப்பிலுள்ள தலைவரிடம் பொறுப்பளிப்பார். இவ்வாறே கலாச்சாரத்துறை அமைச்சர் பல நிகழ்ச்சிகளை திட்டமிட்டு ஒருங்கிணைப்பார். இது போன்று அனைத்து துறை அமைச்சர்களும் தத்தமது பொறுப்புகளை நிறைவேற்றுவர். இதன் மூலம் அனைத்து குழந்தைகளும் குடிமகனின் கடமைகளை உணர்ந்து செயல்படுவர். இது போன்று உங்களுடைய பள்ளிகளில் பாடப்புத்தகத்திற்கு அப்பாலுள்ள சமூக அறிவியலை கற்றல் நடைபெற உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்வீர்.

 

19288 registered users
7708 resources