ஒருங்கிணைந்த கற்றல்

By editor_ta | டிச 17, 2013

(உதாரணத்திற்கு) : அறிவியல் பாடமான நீர் சுழற்சி பற்றி நடத்தும் போது, தமிழ் மொழியில் அது தொடர்பான கவிதை ஒன்று(கீழே கொடுக்கப்பட்டது போல) பாடலாக பாடி குழந்தைகளுக்கு இனிமையான (அறிவியலும் தமிழ் மொழியையும் ஒருங்கிணைந்த) கற்றல் அனுபவத்தை ஏற்படுத்தும் முயற்சியை விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் மேற்கொண்டனர். அக்கவிதை/பாடல்:

நீர் சுழற்சி

மழைநீர்-மனிதனின் உயிர் நீரே

உன் மீள் சுழற்சியால்-நாங்கள்

உயிர் பெற்றோம்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

அதுபோல்

உத்திரகாண்டில் ஆக்கமும் நீ, அழிவும் நீ

                          (மழைநீர்...)

உன்னுடைய கோரப் பசிக்கு

உயிர்பலி எத்தனையோ?

சொல்லி மாளவில்லை

சொல்லாதிருக்க முடியவில்லை

சமீப கணக்கெடுப்பில்

ஏடுகளில் இடம் பெற்ற மணிதர்கள்

நாடுகளில் காணாமல் போன மாயம் என்ன?

                             (மழைநீர்...)

மூன்று நிலைகளில் முதல் நிலை திரவ நீர்

சூரியக் கதிர்பட்டு சூழ்ந்த கருமேகமானாய்

விண்ணின் நிறம் மறைத்து

பெண்ணின் கருங்கூந்தலாய் அழகுற

விரிந்து சென்றாய்

வெப்பச் சலனத்தால் மழையாய் பொழிந்தாயே

நீ- சென்றதும் மண்ணுக்குள்ளே

மனிதர்களை அனுப்பியதும் மண்ணுக்குள்ளே

நீ எதிர்பார்க்கையில் எங்களுக்கு ஏமாற்றம் தந்தாய்

எதிர்பாராத வகையில் எங்களுக்கு விடுமுறை தந்தாய்

மருந்துக்கு உதவாத வேரில்லை

மந்திரத்துக்கு உதவாத வார்த்தையில்லை

தகுதியற்றவர்கள் என்று யாருமில்லை-மழையே

உன்னை ஒருங்கிணைக்கத்தான் ஆளுமில்லை.

எப்படி இருந்தாலும்-

மழைநீர் உயிரினத்தின் உயிர்நீரே

விண்ணின் மழைத்துளி!

மண்ணின் உயிர்த்துளி!

இது பொன்று தங்களது வகுப்பறையில் ஒருங்கிணைந்த கற்றலுக்கு ஏதேனும் முயன்றிருக்கிறீர்களா? கணிதம் தனியாக அறிவியல் தனியாக, மொழி தனியாக இல்லாமல், ஒரு பாடப்பொருளை மற்றொன்றோடு இணைத்து, முழுமையான இனிமையான கற்றலுக்குத் துணைபுரிய ஆசிரியர்களான நமது யோசனைகள் என்னென்ன?

19288 registered users
7708 resources