வார இறுதி செயல்பாடு
Resource Info
Basic Information
கதையானது உலகில் எந்த பார்வையாளரையும்/ கேட்பவரையும் கவரும். நீங்கள் எந்த பாடத்தை கற்பிக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை. (வழக்கமாக மொழி மற்றும் வரலாற்று ஆசிரியர்களும், தாத்தா மற்றும் பாட்டிகளும் கதைகள் சொல்வதில் முன்னோடியாக இருந்தனர். அவர்களுக்கு நாம் தலை வணங்குவோம்!)இச்செயல்பாட்டை குடும்பத்திலுள்ளோரோடும், நண்பர்களோடும் முயற்சி செய்த பிறகு இந்த திங்களன்று வகுப்பறைக்கு எடுத்துச்செல்லவும். ஹீத்தர் ஃபாரஸ்ட்(Heather Forest) என்பவருடைய கதைக் கலை(story arts) என்ற அழகான கதைகள் பொருந்திய திரைச்சீலையிலிருந்து எடுக்கப்பட்டது.
குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் நூலகத்தினர் முதலுயோருடன் நடத்தப்பட்ட கதை கூறும் பணியிடைப்பட்டறைகளை உருவாக்கிய இக்கதைகளின் தொகுப்பை, கல்வியாளர்களும் தமது மொழி மற்றும் கலை பாடதிட்டங்களின் விரிவுபடுத்தி குழந்தைகளின் பேச்சுத்திறன், படிக்கும் திறன் மற்றும் எழுதும் திறனுக்கும் துணைப் புரியலாம். கலைத்திட்டம் முழுவதிலும் எவ்வாறு ஹீத்தர் ஃபாரஸ்ட் அவர்கள் கதை கூறுதலைப்பயன்படுத்தியுள்ளார் என்பதை இங்கு பார்க்கவும்.
ஒரு கதையை உருவாக்குதல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் பயணம் செய்து அதிலுள்ள ஒவ்வொன்றிலும் ஒன்று அல்லது அதற்கு மேல் அதன் கூறுகளை தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்த அனைத்து கூறுகளையும் பயன்படுத்தி ஒரு கதையை மேம்படுத்திக் கூறவும் அல்லது எழுதவும். விளையாட்டாக மேம்படுத்துவதெனில்....ஒரு அட்டையில் ஒவ்வொரு கூறையும் எழுதி, கதாப்பாத்திரம், காட்சி அமைப்பு, தீர்வமைவு மற்றும் அதற்கான தீர்வு முதலியவற்றை தோராயமாக தெரிவு செய்யலாம்.
கதாப்பாத்திரத்தை/கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்தல்:
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுக்கவும்
· பெண் பிள்ளை
· பையன்
· விலங்கு
· ஆம்பளை
· பெண்
· யோசனை
· ஆவி
· இயந்திரம்
· பொருள்
· செடி, மேலும் பல...
காட்சி அமைப்பு:
சூழல்:
· பண்ணை
· கிராமம்
· வேற்றுகிரகம்
· நகரம்
· மலைகள்
· காடு
· துருவப்பகுதி
· சமுத்திரம்
· பாலைவனம்
காலம்:
· பழைய காலம்
· நவீன காலம்
· பிற்காலம்
தீர்வமைவு:
சிக்கலில்:
· திருடியதால் பிடிபடுதல்
· பொய் சொல்லுதல்
· இரகசியத்தை காணுதல்/கேட்டல்
· எதையோ தொலைத்துவிடுதல்
· பிடிபட்டுவிடுதல்
· ஒருவரின் வரம் அல்லது சாபத்திற்கு உள்ளாதல்
· தடை செய்யப்பட்ட இடத்திற்கு செல்லுதல்
· தடை செய்யப்பட்ட பொருளை கண்டுபிடித்தல்
· எதிரி இருத்தல்
· தரக்குறைவாக்கப்படுதல்
· அங்கீகரிக்கப்படாமல் இருத்தல்
· பொறாமை ஏற்படுவதற்கு காரணமாய் இருத்தல்
· எதையோ மறந்துவிடல்
· எதையோ உடைத்தல்
· ஏதோ பிடிக்காமல் இருத்தல்
· ஏதோ தேவைப்படுதல்
· ஒளிந்து கொள்ள அல்லது மறைந்து கொள்ள அல்லது தப்பித்துக்கொள்ள வேண்டும்
· யாரையோ காப்பாற்ற வேண்டும்
· எதையோ காப்பாற்ற வேண்டும்
· மதிப்பு மிக்கது என நிரூபிக்க வேண்டும்
உட்பண்புகள்
உண்மையான சிக்கலை உண்டாக காரணமாய் இருக்கும் உட்பண்புகள்”
· பேராசையுடன் இருத்தல்
· அபாயகரமான ஆர்வம்
· ஆலோசனையை பின்பற்றாமல் இருத்தல்
· சோம்பேரியாய் இருத்தல்
· உலகில் அனைத்துமே கெட்டது என்று கொள்ளும் கோட்பாட்டுடன் இருத்தல்
· குறுட்டுத்தனமாக அன்புடன் இருத்தல்
· சினம் கொண்டு பழிவாங்க காத்திருத்தல்
· அப்பாவியாக அனித்தையும் நம்புதல்
· உருவமற்றதாய் அல்லது ஏடாகோடமாய் இருத்தல்
· பயிற்சிபெறாதவராய் இருத்தல்
· தன்னம்பிக்கை இழந்தவராய் இருத்தல்
· முட்டாளாக இருத்தல்
தீர்வுக்கு உதவியாய் இருக்கும் உட்பண்புகள்
· தைரியமாக இருத்தல்
· கூர்மதியுடையவராய் இருத்தல்
· கற்பனைத்திறன் மிக்கவராய் இருத்தல்
· அன்பானவராய் இருத்தல்
· பெருந்தன்மையுடன் இருப்பவர்
· புத்திசாலியாய் இருத்தல்
· பொறுப்பை நிறைவேற்றுகிறவராய் இருத்தல்
· வலிமையுடன் இருத்தல்
· அனைத்தையும் நம்பிக்கையுடன் பார்ப்பவராய் இருத்தல்
தீர்வு
உதவியாளர் கீழுள்ளவாறு இருத்தல்
· மந்திரவாத(அல்லது வித்தைகள் அல்லது மாய மந்திரங்கள் அறிந்தவர்)
· மந்திரம் தெரியாதவர்
காப்பாற்றப்படுதல்
மாற்றப்படுதல்
திறனைக் கண்டறிதல்
மந்திரத்தை/வித்தையைக் கண்டுபிடித்தல்
யாருடைய உதவியுமின்றி தாமாகவே செய்தல்:
· சாமார்த்தியத்தை வளர்த்துக்கொள்ளுதல்/ சாமார்த்தியமாக இருக்க பயிற்சி பெறுதல்
· உட்பண்புகளை பயன்படுத்திக்கொள்ளுதல்
தீர்வு காண மேற்கொள்ளப்படும் பயணம்
முடிவுரை
· ஏதேனும் ஒரு வழியில் புதிய அமைப்பிலிருந்து முன்பிருந்த அமைப்பிற்கு திரும்புதல்
· வெகுமதி பெறுதல்
· புத்திசாலியாய் இருத்தல்
· பரிசு அல்லது புதையலுடன் வருதல்
முடிவு/இறுதி
· நன்றாக வாழ்தல்
· அதிர்ஷ்டத்தை அல்லது வெகுமதியை மற்றவரிடமும் கொண்டு செல்லுதல்
· உலகைப் பற்றி நல்ல எண்ணங்களை/நம்பிக்கையை வைத்தல்
· பகுத்தறிவை/ஞானத்தை விரும்பிக்கொடுத்தல்
(சிறுபடம் Flickr/MagnetaRose லிருந்து எடுக்கப்பட்டது)