கேட்டல், புரிதல், செயல்படுதல்
Resource Info
Basic Information
நீங்கள், விதிமுறைகளை பின்பற்றுவதில் எவ்வளவு சிறந்தவர்கள்? கொடுக்கப்பட்ட விதிமுறைகளை அடிப்படையாக கொண்டு, சாதாரண விளையாட்டு ஒன்றை விளையாடுவோம்.
மாணவர்களை, ஒரு பென்ஸிலையும்(எழுதுகோல்/கரிக்கோல்) ஒரு தாளையும் தயாராக வைத்திருக்க செய்யவும். வகுப்பிலுள்ள மாணவர்களிடம், நீங்கள் ஒரு தொடராக எளிதான விதிமுறைகளைக் கூறப்போகிறீர்கள் என கூறவும். உங்களது வழிகாட்டலை அவர்கள் தொடர வேண்டும் என கூறுங்கள். உன்னிப்பாக கவனிக்க கூறுங்கள். ஒவ்வொரு விதிமுறையையும் ஒரே ஒரு முறை மட்டும் படித்து விட்டு 5 அல்லது 10 நோடிகளுக்கு காத்திருங்கள். பிறகு அடுத்த விதிமுறையை படியுங்கள்.
1. தாளின் மையத்தில் ஒரு வட்டம் வரையவும்.
2. தாளின் மேல் பகுதியிலுள்ள வலது மூளையில் ஒரு சதுரம் வரையவும்.
3. தாளின் கீழ் பகுதியிலுள்ள வலது மூளையில் முக்கொணத்தை கீழ் நோக்கியிருப்பது போல் வரையவும்.
4. முக்கோணத்திற்குள் ஒரு வட்டம் வரையவும்.
5. தாளின் மேல் பகுதியிலுள்ள இடது மூளையில் முக்கொணத்தை மேல் நோக்கியிருப்பது போல் வரையவும்.
6. முக்கோணத்திற்குள் ஒரு வட்டம் வரையவும்.
7. தாளின் கீழ் பகுதியிலுள்ள இடது மூளையில் ஒரு சதுரம் வரையவும்.
8. சதுரத்தினுள் ஒரு முக்கோணத்தை மேல் நோக்கியிருப்பது போல் வரையவும்.
9. தாளின் மையத்திலுள்ள வட்டத்திற்குள் ஒரு வட்டம் வரையவும்
10. வரைந்த இரண்டாம் வட்டத்திற்குள் இன்னும் ஒரு வட்டம் வரையவும்.
11. இப்பொழுது அதற்குள் ஒரு முக்கோணம் வரையவும்.
12. தாளின் மேல் பகுதியிலுள்ள முக்கோணத்திற்கும், சதுரத்திற்கும் இடையே ஒரு செவ்வகம் வரையவும்.
13. செவ்வகத்திற்குள் இன்னும் ஒரு செவ்வகம் வரையவும்.
14. இரண்டாம் செவ்வகத்திற்குள் இன்னும் ஒரு செவ்வகம் வரையவும்.
15. தாளின் கீழ் பகுதியிலுள்ள முக்கோணத்திற்கும், சதுரத்திற்கும் இடையே ஒரு சதுரம் வரையவும்.
16. சதுரத்திற்குள் இன்னும் ஒரு சதுரம் வரையவும்.
17. இரண்டாம் சதுரத்திற்குள் ஒரு முக்கோணம் வரையவும்.
18. முக்கோணத்திற்குள் ஒரு வட்டம் வரையவும்.
19. தாளின் மேல் பகுதியிலுள்ள முக்கோணத்திற்கும், சதுரத்திற்கும் இடையே ஒரு செவ்வகம் வரையவும்.
20. தாளின் மேல் பகுதியிலுள்ள முக்கோணத்திற்கும், சதுரத்திற்கும் இடையே ஒரு செவ்வகம் வரையவும்.
இருக்கும் நேரத்தை பொருத்து நீங்கள் விதிமுறைகளை அதிகப்படுத்தலாம் அல்லது குறைத்துக் கொள்ளலாம். குழந்தைகளிடம் தாங்கள் வரைந்ததை வகுப்பறையிலுள்ள மற்ற குழந்தைகளுடைய படத்தை ஒப்பிடச் செய்யலாம். அனைத்து தாள்களிலும் ஒரே மாதிரி படம் வைரையப்பட்டுள்ளதா?
குழந்தைகளிடம், இச்செயல்பாடு அவர்களது கேட்டல் திறனை வளர்ப்பதற்கான பயிற்சி என கூறவும்.