உனது பள்ளியை வரைபடமாக்கு

Resource Info

Basic Information

வரைபடங்கள் எல்லாம் மாயாஜாலங்கள்! வரைபடத்தை கையில் வைத்திருந்தால் உலகத்தையே வைத்திருப்பதுபோல் ஆகும். நீங்களே சொந்தமாக வரைபடத்தை  தயாரிப்பது போன்ற ஒரு கற்பனைசெய்து பாருங்கள், அது எவ்வளவு சிலிர்ப்பை தருகிறது! வரைபடத்தைப் பற்றி தாங்கள் புத்தகங்களில் கற்றதை பயன்படுத்தி, பள்ளியை எப்போதும் பார்ப்பதை விட இன்னும் நன்றாக உற்று பார்த்து, வரைய தூண்டும் ஒரு செயல்பாடு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

Duration: 
(All day)
முன்னுரை: 

பள்ளி வரைபடத்தை வரைவதன் மூலம் வரைபடத்தை உருவாக்குவதற்கு தேவையான விஷயங்களை(சின்னங்கள், குறியீடுகள், அளவுகோல் முதலியவை) நன்கு புரிந்துகொள்வதோடு, பள்ளியையும் நன்கு உற்று நோக்குவார்கள்!

Objective: 
  • இடம் சார்ந்த விஷயங்கள் பற்றி யோசிப்பர்
  • அளவுகளையும், திசைகளையும் தோராயமாக கணக்கிடுவர்/மதிப்பிடுவர்
  • நிறக்குறியீடுகளை புரிந்து கொண்டு, அதை பயன்படுத்துவர்
  • ஒரு இடத்தை மேலிருந்து பார்க்கும் போது தெரியும் வான்பார்வை எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனை செய்வர்
  • வரைபடங்களை புரிந்து கொள்வர்
  • வரைபடங்களை படித்து, அதிலிருக்கும் செய்திகளை/சின்னங்களை புரிந்துகொள்வர்
  • குழுவாக செயல்படுவர்
Activity Steps: 

1.       வரைபடத்தை பற்றிய பாடம் கற்கும் போதோ அல்லது பாடம் முடித்த பின் அதை தொடர்ந்தோ, இச்செயல்பாட்டை செய்தால், சிறப்பாக இருக்கும்.

2.       இச்செயல்பாட்டை செய்வதற்கு முன்  வரைபடங்களை படிப்பதற்காக நிறைய பயிற்சிகள் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். கீழே குறிப்பிட்டுள்ள தகவல்களை மாணவர்களிடம் கேளுங்கள்:

 

.......ற்/க்கு கிழக்கில் என்ன உள்ளது?

எது மிக பெரிய மாநிலம்?

திசைகளை எவ்வாறு அறிந்துகொள்வாய்?

அளவுகோல் என்றால் என்ன? நீண்ட தூரத்தை எவ்வாறு குறிக்கலாம்?

3.       குழந்தைகளை குழுக்களாக பிரிக்கவும்(ஒரு குழுவிற்கு 3-4 பேர் இருந்தல் நன்று)

4.       அவர்கள் வெளியில் சென்று உற்று நோக்கலாம். ஒவ்வொரு குழுவிற்கும் பள்ளியிலுள்ள ஒவ்வொரு தளத்தை ஒதுக்கி அதற்கு வரைபடம் அமைக்க சொல்லவும். விளையாட்டு மைதானம் போன்ற பொது இடங்கள் அனைவரின் வரைபடத்திலும் இருக்கட்டும்.

5.       முதலில் வெறும் தாளில்(சாதாரண rough sheet) எந்த அறை எங்கு வரும் என்ற விவரங்களை(பெரிய விஷயங்களை மட்டும்) வரைபடமாக வரையும் படி கூறவும். அவர்கள் முதலாக வரைந்த தோராயமான வரைபடத்தில் மாற்றங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும். ஏனெனில், அறைகளின் இருப்பிடம் போன்றவற்றை மேலிருந்து பார்க்கும் போது எவ்வாறிருக்கும் என்பதை புரிந்து கொள்ள, அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவைப்படும். அவர்களது கையை பிடித்து வரைய கற்றுத்தர தேவைப்படும்; வரைவதற்கேற்றவாறு வினாக்களை எழுப்பவேண்டும்.

 

6.       பெரிய விஷயங்களை அனைத்தையும் தகுந்த இடத்தில் அமைத்த பின், ஒவ்வொரு அறைக்குள்ளும் சென்று சின்ன சின்ன விஷயங்களான சாளரங்கள்(ஜன்னல்கள்), கதவுகள், அலமாரிகள் முதலியவற்றை உற்று நோக்கி வரைய வேண்டும். மேஜைகள், நாற்காலிகள், அமரும் பலகைகள், எழுதும் பலகைகள் (தலைமை ஆசிரியர், ஊழியர்களின் அறையில் ஆசிரியர்கள், பள்ளியை பார்க்க வருபவர்களுக்கான நாற்காலி) முதலிய விஷயங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். வரைபடத்தில் மக்களை காட்டுவது உண்மையில் உற்சாகமூட்டும் செயல்பாடாகுமே!.

7.       எவ்வளவு விஷயங்களை வரைபடத்தில் குறிக்கலாம் என்பது வரைபவர்களை பொருத்ததே.

குறிப்பு: வரைபடங்கள் என்பது உண்மையிலிருப்பவற்றை சுருக்கமாக குறிக்க கூடியது, அதில் பொருத்தமான தகவல்கள் உள்ளடங்கும். சுலபமாக வரைபடத்தை படிக்க/புரிந்து கொள்ள, அதில் தேவையற்ற விவரங்களை நீக்கி கொள்ளலாம்.  

8.       அளவுகோல், அமைந்த இடம்/திசை, பார்க்கும் கோணம் முதலியவற்றை குறிக்கும் விஷயங்களை சரிபார்த்துக் கொள்ளவும்.

 

நாற்காலி சுவரின் அளவிற்கு பெரிதாக உள்ளதா?

கரும்பலகை கதவிற்கு அருகிலோ அல்லது சாளரத்திற்கு அருகிலோ உள்ளதா?

இச்சுவற்றில் கதவு இருக்கிறதா? முதலியவற்றை சரி பார்க்கவும்

 

9.       சந்தேகங்களை தீர்த்தல், சரி பார்த்தல் முதலிய அனைத்தும் செய்து வரைபடத்தை முடிந்தவுடன், அதனை தெளிவாக வரைய, அவர்களுக்கு நல்ல தாளை(முடிந்தால் A3 அளவுள்ள 140-200 gsm கெட்டியான/மொத்தமான/கார்ட்ரிட்ஜ்(cartridge) தாளை) வழங்கவும். வரை கோலை(ரூலரை ruler) பயன்படுத்தி நேரான கோடுகள் வரைய ஊக்குவிக்கவும்.

 

10.   வரைபடத்தை பென்சிலில்(கரிக்கோலில்) வரைந்த பின்னர், கோடுகளை கருப்பு பேனாவில்(எழுது கோலில்) வரைய சொல்லலாம்.

11.   நாற்காலி, மேஜை, ஆசிரியர், மாணவர், குழாய்கள் முதலியவற்றை சின்னங்கள் மூலம் குறிப்பிட செய்யலாம். தெளிவான எளிய சின்னங்களை உருவாக்க ஆசிரியர்கள் உதவலாம்.

12.   வண்ணம் தீட்டலாம். நிறங்கள் எவ்வாறு ஒரு தகவலை தெரிவிக்கின்றது என்பதை கூற வேண்டும் உதாரணத்திற்கு: பச்சை நிறம் விளையாட்டு மைதானத்தையும், பழுப்பு நிறம் உட்புற அறைகளையும், நீல நிறம் நீர் ஆதாரங்களையும் குறிக்கிறது.

நிறங்கள் வரையறுக்கப்படுவதன் மூலம் வரைபடத்தை நேர்த்தியாக முடிக்கலாம்-எடுத்துக்காட்டாக: திட வண்ணங்களை அவ்விடம் முழுக்க நிரப்புவதற்கு பதிலாக வெளிக்கோட்டில் மட்டும் வரைக்கீற்றாக வண்ணங்களை தீட்ட வேண்டும்.

 

13.   வரைபடத்தின் கீழே முக்கியமானவற்றை (குறியீடுகள் / சின்னங்கள் / நிறங்களின் பட்டியலை விவரித்து) மாணவர்களை வரைய சொல்லலாம்.

 

14.   இறுதியாக, ஒவ்வொரு குழுவிலுள்ளவர்களும், வகுப்பிலுள்ள மற்றவர்களுக்கு, அவர்கள் தயாரித்த வரைபடத்தை வழங்க வேண்டும். 

19439 registered users
7743 resources