உங்கள் பள்ளி சுற்றுச்சுழல் தோழமையுடன் உள்ளதா?
Resource Info
Basic Information
உங்கள் பள்ளி சுற்றுச்சுழல் தோழமையுடன் எவ்வாறு உள்ளது என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.
பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் (Bombay Natural History Society) அருமையான வெளியீடான இன் ஹார்மனி வித் நேட்சர் (In harmony with nature-இயற்கையோடு இணக்கம்) என்ற புத்தகத்தின் மஹாராஷ்டிராவில் நிலையான வாழ்க்கையை வாழ கற்றல் என்ற தலைப்பிலுள்ள ஆசிரியர்கள் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது தான், இந்த கணக்கெடுக்கும் தாள்.
சுற்றுச்சுழல் தோழமையுடனுள்ள வாழ்க்கைமுறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
உங்களுக்கு பென்சிலும், தகவல் அறியும் தாளும் (இதனுடன் இணக்கப்பட்டுள்ளது) தேவைப்படும். உற்று நோக்கலும், விவரம் சேகரித்தலுமே இச்செயல்பாட்டின் வழிமுறையாகும்.
வழிமுறை:
1. வகுப்பறையை 4 குழுக்களாக பிரிக்கவும்.
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அறியும் தாள்களை குழுவினர்களின் கையில் அளிக்கவும். தகவலறியும் தாளின் 1-5 கேள்விகளை முதல் குழுவினருக்கும், 6-10 கேள்விகளை இரண்டாம் குழுவினருக்கும், 11-15 கேள்விகளை மூன்றாம் குழுவினருக்கும், 16-20 கேள்விகளை நான்காம் குழுவினருக்கும் வழங்கவும்.
3. ஒவ்வொரு குழுவிலுள்ளோர்களையும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை, பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் சென்று கண்டுபிடிக்க சொல்லவும்.
4. குழுக்களுக்கு தகவல்களை சேகரிக்க 2 நாட்கள் வழங்கவும்.
5. தகவல்கலுடன் குழந்தைகள் தயாரானதும், அவர்களது தகவல்களை ஒன்றாக சேர்க்கவும். ஒவ்வொரு சாதகமான பதிலுக்கும் ஒரு புள்ளி வழங்கவும். அனைத்து புள்ளிகளையும் கூட்டவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள தரத்தின் அடிப்படையில் ஒரு தீர்ப்புக்கு வரவும்.
6. பாதகமான பதில்களை எவ்வாறு சாதகமானதாக்குவது என்பதை விவாதிக்கவும்.
7. இது போன்ற செயல்களை வீட்டிலும், தங்களைச் சுற்றியுள்ள இடங்களிலும் மேற்கொள்ள ஊக்கப்படுத்தவும்.
ஒவ்வொரு கேள்விக்கு பக்கதிலும், உள்ளது எனில் ’ஆம்’ என்ற பெட்டியில் R என்றும், இல்லை எனில், ’இல்லை’ என்ற பெட்டியில் T என்றும் குறியிடவும்.
|
|
ஆம் |
இல்லை |
1. |
பள்ளியில் தோடம் உள்ளதா?
|
|
|
2. |
தோட்டத்தின் கழிவுகள் உரமாக்கலுக்கு பயன்படுத்தப்படுகிறதா?
|
|
|
3. |
பழைய தாள்களை(கடந்த வருடத்தில் பயன்படுத்திய ஏட்டில் பயன்படுத்தப்படாத தாள்களை அல்லது கணினியின் தாள்களை) சாதாரண தாளாக (as rough paper-ரஃப் பேப்பராக) மீண்டும் உபயோகப்படுத்தப்படுகிறதா?
|
|
|
4. |
சூரிய சக்தியால் இயங்கும் கணிப்பான்கள் (அ) கால்குலேட்டர்கள் பயன்படுத்தப்படுகிறதா? |
|
|
5. |
பயன்பாட்டில் இல்லாத போது மின்சார விளக்குகள் அனைக்கப்படுகிறதா? |
|
|
6. |
ஒழுகும் குழாய்கள் பழுது பார்த்து உடனடியாக சரி செய்யப்படுகிறதா? |
|
|
7. |
ஆசிரியர்களும் மாணவர்களும் நெகிழி பைகளுக்கு பதிலாக துணி பைகளை பயன்படுத்துகிறார்களா? |
|
|
8. |
மறுசுழற்சிக்காக ஏதேனும் கழிவு/வீணானவற்றை சேகரித்து வைத்துள்ளீர்களா? |
|
|
9. |
பள்ளியில் ஏற்படும் சத்தம் அனுமதிக்கப்பட்ட வரையறைக்குள் உள்ளதா? |
|
|
10. |
பள்ளி நூலகத்தில், சுற்றுச்சூழல் பிரச்சனைகள், இயற்கை அல்லது வன வாழ்க்கை குறித்த புத்தகங்களை வழங்குவார்களா? |
|
|
11. |
பள்ளியில் இயற்கை குழு/சங்கம் உள்ளதா? |
|
|
12. |
குழந்தைகளும், ஆசிரியர்களும் இயற்கை அல்லது சுற்றுச்சூழல் சம்பந்தமான செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளுகின்றனரா? |
|
|
13. |
பள்ளியில், சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடுகின்றனர் |
|
|
14. |
இந்த பள்ளி, சுற்றுச்சூழல் குறித்து ஏதேனும் பிரச்சாரத்தில் பங்கெடுத்துள்ளதா? |
|
|
முடிவுகள்: நீங்களாகவே ஒவ்வொரு சாதமான பதிலுக்கும் ஒவ்வொரு புள்ளிகள் அளித்து, பின்பு முடிவுகளை காணுங்கள்.
20புள்ளிகள்: வாழ்த்துகள். சபாஷ்! இந்த பள்ளி சுற்றுச்சூழல் தோழமை பன்பில் முதல் இடத்திலுள்ளது.
>=15 முதல் <20 புள்ளிகள் வரை: இந்த பள்ளி முதல் இடத்திற்கு வருவதற்கு போராடுகிறது. இதனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
>=10 முதல் <15 புள்ளிகள்: இந்த பள்ளி தன்னை தள்ளிக்கொண்டு முன்னேறி சுற்றுச்சூழல் தோழமையுடன் இருப்பது அவசியமாகும்.
<10புள்ளிகள்: இந்த பள்ளி சுற்றுச்சூழல் தோழமையுடன் கண்டிப்பாக கடினமாக வேலை பார்க்க வேண்டும்