அறிவியல் கண்காட்சியும் அதன் நல்லவிதமான பக்க விளைவுகளும்

Resource Info

Basic Information

ஒருவர் தான் கற்றதை, வழக்கமான முறையிலும் மற்றும் திட்டமிட்டபடியும் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தைக் காட்டிலும், ஒரு ஆசிரியர் அம்மாணக்கரை, எந்தெந்த வகையிலெல்லாம் பகிர்ந்துகொள்ளும்படி ஊக்கப்படுத்தலாம் என்பதை காணவும். இத்துணுக்குச் செய்தி உ.பி. யிலுள்ள ஜான்பூரின் சுயித்தக்கலன் வட்டதிலுள்ள சகிருத்தின்பூர் ஆரம்ப பள்ளியை சேர்ந்ததாகும்.

Abstract/Short description: 
(All day)
Abstract/Short description: 
  • மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதே இந்நிகழ்ச்சி நடத்துவதின் நோக்கமாகும்.
  • வெளி ஆட்கள் முன், தனது கருத்தையும், தனது பார்வையையும் வெளிப்படுத்துவதற்கு மாணவர்களுக்கு பயம் இருந்தது. ஆனால் இந்நிகழ்ச்சி அவர்கள் தைரியமாகவும், தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் தன்மை மிகுந்தவர்களாகவுமாய் மாற்றியது.
Abstract/Short description: 

நாங்கள் எவ்வாறு செய்தோம்? இது ஒன்று புதிதானதும் அல்ல, அசலானதும் அல்ல. இது, விளக்கப்பட கண்காட்சி மூலம், தங்களது தொடர்புகொள்ளும் திறனை காட்டியதற்கான ஒரு வெற்றிக் கதையே!

 

1-    சமன்படுத்தப்பட்ட குழுக்களை உருவாக்கவும்

2-    விளக்கப்படங்களை எந்த தலைப்பின் கீழ் உருவாக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும்.

3-    குழுவிற்குள் விவாதங்களை ஏற்படுத்தவும்.

4-    சந்தேகங்களை தீர்த்துவைக்கவும்

5-    அவர்களது கண்ணோட்டத்தை வெளிப்படுத்த இடமளிக்கவும்.

6-    குறிப்பிட்ட விளக்கப்படத்தின் பல கருத்துகளை, தலைப்புகளாக குழுவிலுள்ளோர்களிடையே பிரித்துக்கொடுக்கவும்.

7-    அவர்களுடைய காட்சியளிப்பை மேம்படுத்த உதவவும்.

8-    வெட்டவெளியில் கண்காட்சியை நிகழ்த்தவும்.

9-    வெளியாட்களையும், உள்ளூர் கிராமவாசிகளையும் அழைக்கவும்.

10-                       தாங்கள் கற்றதை வெளிப்படுத்த பொறுப்பு ஏற்றுக்கொள்ளுமளவிற்கு மேம்படுத்தவும்.

 

இவ்வளவு அழகான ஊக்கமும், துணையும், பங்கேற்ப்பும் அளித்த தலைமை ஆசிரியர் விஜய் பஹதூர் படேல் அவர்களுக்கும் துணை ஆசிரியகளான சீமா சிங், சரோஜ் படேல், ராசியா பேகம் ஆகியோருக்கும் எழுத்தாளர் தனது நன்றையை தெரிவிக்க விழைகிறார். மேலும் தனது நன்றியை மாணாக்கர்களுக்கும், கண்காட்சியை காண வந்தோர்களுக்கும் தெரிய படுத்த விரும்புகிறார்.

 

17462 registered users
6669 resources